முதற்கட்ட நடைப்பயணமென்று 2010 சனவரி 25 காலை 11 மணி அளவில் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு Nadai_400நெடுநடைப் பயணத்தை தொடங்கினோம். நூற்றுக்கணக்கான சிற்றூர் கள், பேரூர்கள், நகரங்களைக் கண்டு 3 மாவட்டங்கள் ஊடாக பயணித்தோம். இலட்சத் துக்கு மேல் தமிழர்களைச் சந்தித்தோம்.

மனதில் பதிந்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கோடியக்கரையில் சனவரி 25இல் புறப்பட்டுக் குடந்தையில் மார்ச்சு 12இல் நிறைவு செய்தோம். சனவரி 25 மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள். மார்ச்சு-12 முதல் மொழிப்போரில் (1938) இன்னுயிர் ஈந்த தாலமுத்து நினைவுநாள்.

இந்தியாவுக்கு ஒரு 47 வந்தது போல். தமிழர்கள் நமக்கு ஒரு 47 வர வேண்டும் என்று தோழர் தியாகு நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் - நடைப்பயணத் தொடக்க நிகழ்வில் குறிப்பிட்டார். தமிழர்களுக்கு ஒரு 47 வர வேண்டும் என்ற எண்ணத்தை இந்த 47 நாள் நடைப்பயணம் தோற்றுவிட்டதாக வழியில் பலரும் எடுத்துக்காட்டினர்.

முதல் நாள் கோடியக்கரை தொடங்கி திருக்குவளை, நாகை, திருவாரூர், கீழ்வெண்மணி, மயிலாடுதுறை, ப+ம்புகார், சீர்காழி, குத்தாலம், வலங்கைமான், சந்திரசேகரபுரம், செம்பியநல்லூர், மன்னார்குடி, வடுவ+ர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பாபநாசம், திருப்பனந்தாள் நிறைவாக 47ஆம் நாள் குடந்தை வந்தடைந்தோம்.

சென்ற ஆண்டு இதே காலத்தில் தமிழீழ மண்ணில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தது. தமிழர்கள் அனைவரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, விழலுக்கிரைத்த நீராகப் போயிற்று. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் ... என்று கொதித்து, போரை நிறுத்தக் கோரி, உலகத் தைத் திரும்பிப் பார்க்க வைத்த போராட்ட முறையைக் கையிலெடுத்தார் மாவீரர் முத்துக்குமார். அவரின் முதலாண்டு நினைவு நாள் 29.01.2010. அந்த நாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி அவரை நெஞ்சில் நிறுத்தித் திருக்குவளையிலிருந்து வேளாங் கண்ணி நோக்கி நடந்தோம்.

சனவரி 31 காலை ஏஜிகே என்று அழைக்கப்படும் தமிழர் தன்மானப் பேரவை நிறுவனர். தோழர் அ.கோ. கஸ்தூரிரங்கனை அந்தணப்பேட்டையில் அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம். தோழர் தியாகுவை உருவாக்கிய ஆசான்களில் இவரும் ஒருவர். சிறையில் அவரோடு ஏற்பட்டப் பட்டறிவைச் சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்களில் தீட்டித் தலைவர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார் தியாகு.

சிறையில் தோழர் ஏஜிகே சங்கங் கட்டியது பற்றியும், போராட்டங்கள் நடத்தியது பற்றியும் எனக்குச் சொல்ல நேர்ந்த போது ஏஜிகே சொன்ன ஓர் உவமையை எனக்குச் சொல்லி விளக்கம் தந்தார். “துவரங்குச்சியால் சிலம்பமாடுகிறேன்” என்பதே அது.

சனவரி 31 இரவு 6 மணி அளவில் கீழவெண்மணிக்குச் சென்றோம். சாலையிலிருந்து நினைவிடம் இருக்குமிடத்துக்கு அப்போதுதான் தார் சாலை தயாராகிக் கொண்டிருந்தது. இயக்கக் கொடியோ, பதாகையோ எடுத்துச் செல்லாமல், பேசாமல் அமைதியாக உள்ளே செல்வோம் என்று அழைத்துச் சென்றார் தோழர் தியாகு.

ஆதிக்க வர்க்கத்தினால் ஒரே குடிசைக்குள் தீக்கிரையான 44 ஈகியரின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். 1968 திசம்பர் 28இல் நடந்தது அந்த வர்க்க, வருண சாதிக் கொடுமை. அப்போது நான் பிறக்க வில்லை. அந்த நிகழ்வு பற்றியும் அது தன்னை எந்தளவு பாதித்தது என்பது பற்றியும் திரும்பி வரும் போது தோழர் தியாகு கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து ஆய்வு செய்து கட்டுரை எழுதியது பற்றி யெல்லாம் கூறினார். அதில் குறிப்பிடத்தக்க செய்தி: வெண்மணி மக்களிடம் தோழர் தியாகு கேட்டாராம்: “உங்களைப் பாட்டாளித் தோழர் களே என்றும், ஒடுக்கப்பட்ட மனிதர்களே என்றும் உங்கள் தலைவர்கள் விளிப்பார்கள். எப்போதாவது உங்களைத் ‘தமிழர்களே!’ என்று அவர்கள் அழைத்தது உண்டா? ”

இல்லை,

“நீங்கள் தமிழர்கள் என்று தெரிந்தும், அப்படி உங்களை அடையாளப்படுத்தத் தவறியதால் தான், தொழிலாளர்களாகவும் மனிதர்களாகவும் போர்க் குணத் தோடு போராடிய நீங்கள் காவிரி உரிமை மீட்புக்காகத் தமிழர்களாகப் போராட வேண்டிய தேவையை உணராமல் இருக்கிறீர்கள்”.

“நீங்கள் சொன்னதை அவர்கள் புரிந்து கொண்டார்களா? ” என்று நான் கேட்டேன். “புரிய வைப்பதற் காகத்தான் இந்த நெடுநடைப் பயணம்” என்றார் தோழர் தியாகு.

பிப்ரவரி 6ஆம் நாளில் மயிலாடுதுறை யிலிருந்து ப+ம்புகார் புறப்பட்டோம். வழியில் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வாயிலில் மொழிப்போர் ஈகி சாரங்கபாணி நினைவுத் தூண்; உள்ளது. அங்கு மலர் தூவி அஞ்சலி செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அன்றிரவு ப+ம்புகார் சென்றோம்.

பிப்ரவரி 07ஆம் நாள் காலை கண்ணகி கலைக்கோட்டம் சென்றுப் பார்த்தோம். 1973இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கட்டப்பட்டது. சிலப்பதிகாரக் காவியத்தைக் கல்லாய் வடித்துள்ளனர். கருணாநிதி செய்த நல்ல செயல் ஒரு சில உண்டென்றால் அவற்றில் ஒன்றாக இதைச் சொல்லலாம்.

மாலையில் சீர்காழி சென்றோம். ஈழப் போராட்டத்தில் முத்துக்குமாருக்குப் பின் தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டவர் இரவிச்சந்திரன.; சென்ற ஆண்டு இதே நாளில் தற்கொடை தந்தவர். அவரின் சொந்த ஊரான சீர்காழியிலே பெதிக, மதிமுக தோழர்கள் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினோம்.

பிப்ரவரி 12ஆம் நாள் வலங்கைமான் சென்று தங்கினோம். அங்கு திரு அமீர் ஜானைச் சந்தித்தோம். Nadai_300ஓர் இசுலாமியர் நாத்திகராக மாறிச் சமூகத் தொண்டாற்று கிறார். மருத்துவராகி மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கிறார். அவர் வீட்டு வாசலில் கொட்டகை போட்டு ‘நேர்மை நிரூபணப் படிப்பகம’; வைத்து நடத்துகிறார்.

இவரைப் பற்றி தோழர் தியாகு கூறிய செய்தி: “இறந்த பின் தன்னை அடக்கம் செய்வதற்காகத் தனி இடம் வாங்கிப் போட்டுள்ளார்”. இசுலாமியர்கள் ஒரு நாத்திகனை இறப்பில் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;.

தோழர் தியாகுவை நாத்திகராக்கியவர் அமீர்ஜான். இவரிடமிருந்து விவாதக் கலையைக் கற்றுக் கொண்டதாகக் கூறுவார்.       13ஆம் நாள் காலை சந்திரசேகரபுரம் சென்றோம். தோழர் தியாகுவின் தாய் தந்தையைப் பார்த்தோம். அன்று நடுப்பகல் பயரி என்னும் சிற்றூரில் தோழர் தியாகுவின் அக்காள் வீட்டிற்குச் சென்றோம். அக்காள் மகன் கிருஷ்ணமணி (எ) ராஜா விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.

அன்றிரவு செம்பியநல்லூரில் தோழர் திருநாவுக்கரசு (எ) அரசு வீட்டில் தங்கினோம். தாய்மண் இயற்கை வேளாண் பண்ணையில் தங்கியது மனநிறைவைத் தந்தது. அரசு - தோழர் தியாகுவின் சுவருக்குள் சித்திரங்களில் இடம் பெற்றவர். சிறைக்குப் போவதற்கு முன்னிருந்தே பழகியவர். பொறியாளராக இருந்து இயற்கை மீதும் மண் மீதும் கொண்ட பற்றினால் இயற்கை விவசாயியானவர். தாளாண்மை உழவர் அமைப்பு நடத்துகிறார்.

பிப்ரவரி 16இல் பெரும்பண்ணைய+ர் சென்றோம். தோழர் தியாகு வீட்டை விட்டு வெளியே வந்து இயக்கப் பணியாற்றிய ஊர், சுவருக்குள் சித்திரங்களில் வரும் தோழர் மாணிக்கத்தின் வீட்டையும், நாளெல்லாம் பட்டினியோடு வேலை செய்துவிட்டு அந்திசாய வந்து, எந்த முருங்கை மரத்தில் கீரை பறித்துச் சமைத்து உண்பார்களோ அந்த முருங்கை மரத்தையும் கண்டோம். தோழர் பாலு உடனிருந்து எல்லாவற்றையும் எங்களுக்குக் காட்டி விளக்கினார். அப்போது அவருடன் பழகிய தோழர்களையும் அவர்கள் வீட்டையும் பார்த்தோம். இளநீர், தேநீர், முறுவல், குடிநீர் என்று அன்போடு தந்தனர்.

23.02.2010 காலையில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரத்தின் நினைவிடத்துக்குச் சென்று பார்த்தோம். சிறிய அளவில், பராமரிப்பின்றிக் கிடக்கிறது. அங்கிருந்து அணைக்காடு வழியாக பாமினியாறு பாலம் கடந்ததும் வந்த காவலர்கள் மறு நாள் மதியம் அவ்வழியே நாங்கள் திரும்பும் வரை பாதுகாப்புக்கு வந்தார்கள். நெடுநடைப் பயணத்திலேயே அதிக அளவு பாதுகாப்புக்கென்று காவலர்கள் உடன் வந்த ஊர் முத்துப்பேட்டை. மதக் கலவரம் மக்களைப் பிரிப்பதை நேரில் கண்டோம்.

நெடுநடைப்பயணத்தின் இடையில் இரு நாள், இறுதி நாள் என்று விழியிழந்த தோழர்கள் எங்களோடு சேர்ந்து நடந்த மூன்று நாள்களே பயணத்தின் முத்தாய்ப்பான நாள்கள் எனலாம்.

அவர்களில் தோழர் க. வீரப்பன் அவர்களிடம் பேசும் வாய்ப்புப் பெற்றேன். அவரின் அரசியல் ஈடுபாட்டைத் தெரிந்து கொண்ட போது வியந்தேன். கண்ணிருந்து படித்து அறிவு பெற்றவனெல்லாம் நாட்டையும் மொழியையும் பற்றிச் சிந்திக்க மறுக்கிற நிலையில் இவர்கள் படிக்கச் சொல்லிக் கேட்டு அறிகிறார்கள். வானொலி, தொலைக்காட்சிகளில் கேட்டு அறிகிறார்கள், செயல்படு கிறார்கள்.

தமிழ்த் தேசியச் சிந்தனை, தெளிவாகவும் வலுவாகவும் இவர்களிடம் இருக்கக் கண்டேன்.

03.03.2010

காலை உணவுக்கு இளங்காட்டில் இருந்தோம். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த ஊர். அவர் வீட்டுக்குச் சென்றோம். அவரின் அண்ணன் ஓய்வு பெற்ற பொறியாளர் கோ. பாலகிருஷ்ணன் சிற்றுண்டி தந்து சிறப்பித்தார். சிறிது நேரம் அவருடன் அமர்ந்து இளங்காடு குறித்தும் தஞ்சாவ+ர் மாவட்ட இலக்கிய வளம் குறித்தும் பேசினோம். ஆனால் ஐயா நம்மாழ்வார் அவர்களைப் பார்க்க முடியவில்லை.

அன்றிரவு 7 மணியளவில் கரிகாலன் கட்டிய கல்லணை யைக் கண்டோம். அங்கு பயணியர் விடுதியில் தங்கினோம். தமிழரின் அறிவு ஆற்றலை, ஆற்றலில் ஒன்றை நேரில் கண்ட நாள் அது. தமிழனாய்ப் பிறந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

09.03.2010

இரவு திருப்புறம்பியத்தில் தொடங்கி 4 நாள் இரவு தங்கும் ஒவ்வொரு ஊரிலும் வந்து உரையாற்றினார் பேராசிரியர் மருதமுத்து. அவரைச் சந்தித்துப் பேசினோம். 1970க்கு முன் அழித்தொழிப்பு இயக்கத்தில் தோழர் தியாகு நுழையக் காரணமாய் இருந்தவர். சித்திரங்கள் படித்தவர்களுக்குத் தெரியும். சிறந்த ஆய்வு நூல்களை எழுதியவர். பொது வாழ்வுக்குத் தன்னைக் கொடுத்தவர்களில் இவர் முதன்மையானவர். பல துன்பங்களைக் கடந்துத் தியாக வாழ்வு வாழ்கிறார். பேராசிரியர் என்பதை விட போராளி மருதமுத்து என்பதையே விரும்புபவர்.

தோழர் தியாகுவின் மூன்று ஆசான்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!

சில ஊர்களைத் தவிர பெரும்பாலான ஊர்களையும் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். தாய்மண் பண்ணை தவிர இயற்கை வளங்கள,; ஆறுகள், ஏரிகள், குளங்கள் வறண்டும் வற்றியும் கிடப்பதில் மிகுந்த வருத்தமே.

தமிழ்நாட்டிலேயே நடைப்பயணமாகச் சிற்றூர்கள், பேரூர்கள் என்று 500க்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் சென்று தமிழர்களாக நாம் இணைந்து போராட வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தது இதுவே முதல் முறையாகும். 47 நாள் 1045 கிலோமீட்டர் கடுமையானது என்று மலைப்பவர்கள் பலருண்டு. எனக்கே கூட ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் என்ற போது, என்னால் முடியுமா? என்று அச்சமுற்றேன். ஆனால்...

ஒரே நாளில் 34 கிலோ மீட்டரெல்லாம கூட நடநதேன் என்றால் ...   எல்லாநாளும் முழுமையாக நடந்தேன் என்றால் ...

என்னை நடக்க வைத்த இயக்கத் தலைமையையும், பயணத்தில் பங்கேற்ற மூத்த தோழர்களையும் எண்ணிப் பார்க்கிறேன்.

மொத்தத்தில் இந்நடைப் பயணம் தமிழ்நாட்டு விடுதலைக்குப் பாடுபடவேண்டும் என்ற துடிப்புள்ளவர்களுக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தையும், சமூக நீதித் தமிழ்த் தேசம் இதழையும் அறிமுகப் படுத்தியது. தமிழ் மீட்பு தமிழர் மீட்பு என்ற சொற்களை விதைத்தது. தமிழினத்துக்காகப் போராட வேண்டும் என்ற துடிப்புள்ள சிலரையாவது இயக்கம் அடையாளம் கண்டு வென்றுள்ளது என்ற அளவில் மகிழ்வு. மிகக் குறைந்த ஆள் வலிமை, அமைப்பு வலிமை, பொருள் வலிமை கொண்டு இயக்கம் இதைச் செய்து முடித்ததில் பெருமை.

-வேல்முருகன்

Pin It