நிலத்திலிருந்து கிணறு வெட்டிப் பெறும் டீசல் சீக்கிரமே தீர்ந்து போகப் போகிறது. மாற்றாக சுள்ளி, கட்டை போன்ற மீந்து போன வேளாண் கழிவுகளிலிருந்து சுலபாமாக புதிய ரக டீசலைப் பெறும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு மர டீசல் என்றுப் பெயர்.

பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் நமது மற்ற விலைவாசிகள் அமைகிறது. டீசல் விலை ஏறினால் ஆட்டோ கட்டணம் முதல் காய்கறி, பால் விலைகளும் ஏறிவிடுகிறது. இப்படி உயர்ந்து கொண்டே போனால் இது எங்கே போய் முடியும்? விலைவாசி முடிகிறதோ என்னவோ அரபு நாடுகளில் எண்ணெய் ஊற்றுகள் ஒரு நாள் வற்றத்தான் போகிறது.

எவ்வளவுக் கெவ்வளவு நாம் அடுத்த வீட்டுக்காரனை நம்பி வாழ்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தொல்லைகளும், அடிமைத்தனமும்தான் மிஞ்சும். பக்கத்து வீட்டுக்காரன் வெச்சதுதான் சட்டம் என்றாகிவிடும். உண்மையிலேயே நமக்கு சுதந்திரம் வேண்டுமானால், பெட்ரோல் டீசல் பொருத்தவரை நாம் முதலில் விடுதலை பெற்றாக வேண்டும். நமக்கு வேண்டிய டீசல் எண்ணெயை நாமே உருவாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். அதற்கப்புறம் நாம் வல்லரசாக ஆவோமா மாட்டோமா என்பது தெரியும்.

பயோடீசல் மலிவாகவில்லை

மாற்று டீசல்கள் தயாரிப்பில் நிறைய சோதனைச் சாலைகள் இறங்கியிருக்கின்றன. காட்டாமணக்கு விதை எண்ணெயை டீசலாக மாற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வடைசுட்டு மீந்த எண்ணெய் மட்டுமல்லாமல் புங்க எண்ணெய், வேப்ப எண்ணெய் என்று எந்த எண்ணெயை வேண்டுமானாலும் டீசலாக்கலாம். பன்றி - மாட்டுக் கொழுப்பையும் மாற்றலாம். எண்ணெய் மற்றும் கொழுப்புக்களை டீசலாக மாற்றும் செலவு அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு அரபு டீசல்களே பரவாயில்லை என்றிருக்கிறது.

கேஸால் பரவாயில்லை

மெக்ஸிகோ நாட்டில் கரும்பு, சோயா பருப்பு, சோளமாவு ஆகியவற்றை நொதிக்க வைத்து சாராயம் வடிக்கிறார்கள். ஆல்கஹால் அல்லது எத்தனால் என்று அழைக்கப்படும் சாராயத்தை கேùஸôலீன் எனப்படும் பெட்ரோலுடன் வெளிநாடுகளில் பெட்ரோலை (கேஸ் அல்லது கேஸலீன் என கூப்பிடுவார்)  கலந்து வண்டி ஓட்டுகிறார்கள். அதற்கு கேஸால் என்றுப் பெயர். எஞ்சினில்கூட பெரிதாக எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை. கரும்பு அங்கே எக்கச்சக்கமாக வளருவதால் எத்தனால் மலிவாகக் கிடைக்கிறது. சக்கரை ஆலைகளில் விழும் மொலாஸ்ஸஸ் கழிவு, எத்தனாலுக்கு உகந்த கச்சாப்பொருள். முதல் தலைமுறை தொழில்நுட்பம் என்றழைக்கப்படும் இதன் அடிப்படையில் 180 தொழிற்சாலைகள் உலகில் ஏற்கனவே உள்ளன. இது வெறும் 10 சதம்தான்.

அரிசியா எண்ணெயா?

இதை மேலும் 100 சதவிதமாக உயர்த்த முற்பட்டால் உணவுப்பஞ்சம் உலகில் தலைவிரித்தாடும். எப்படி எனில்; எல்லா விளைநிலங்களும் கரும்பு, சோயா, சோளமாக மாறி  டீசலாக ஓடும். சாப்பாட்டுக்கு வேண்டிய நெல், கோதுமை ஆகியவற்றைப் பயிரிட ஆளிருக்காது. விவசாயிகள் எதில் அதிக காசு வருமோ அதைத்தான் பயிர் செய்வார்கள். சாப்பிட அரிசியும் இருக்காது, மாமிசம், காய்கறிகளும் விலை ஏறிப்போய் அவற்றிற்குக் கடும் பஞ்சம் ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விளை நிலத்தை எரிபொருளுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதில் நாம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

செல்லுலோஸ் எனும் மரப்பொருள்

இரண்டாம் தலைமுறை மாற்று டீசல் தொழில் நுட்பத்தைப் பற்றித்தான் நான் இங்கே சொல்லவந்தது. இதில் நாம் பயன்படுத்தப்போவது விளை நிலங்களில் உற்பத்தியாகும் கச்சாப் பொருள்களை அல்ல, மரப்பொருள்களை! டெக்னிக்கலாக இதை செல்லுலோஸ் என்பார்கள். கட்டை, மரம், காகிதம், துணி, இலை, தழை, வைக்கோல், கரும்புச் சக்கை, நார், ஓடு, உமி,... அதாவது செடி, கொடி, மரம், பயிர்கள், ஆகியவற்றின் அனைத்துக் கழிவுகளிலிருந்தும் கிடைக்கும் செல்லுலோஸ் அதாவது மரப்பொருள்தான் டீசலுக்கான மூலப்பொருள்.

செல்லுலோசுக்குப் பஞ்சமே கிடையாது

உலகில் சூரியஒளி சக்தி சிறைப்படுத்தப்பட்டு செல்லுலோசாக சேமிக்கப்படுகிறது. பூமியில் உயிரினங்களின் மொத்த எடையில் பாதி செல்லுலோஸ்தான்! உலகில் எதற்கு பஞ்சம் வந்தாலும் செல்லுலோசுக்கு வராது. மரத்தூள், வைக்கோல், பருத்திமாறு, மிளகாமாறு போன்ற காய்ந்த தாவரக் கழிவுகளிலிருந்து வேண்டிய அளவு செல்லுலோஸை பெறலாம், இதற்கு தனியாக எதையும் பயிர் செய்யத் தேவையில்லை. வரண்ட நிலத்தில் வளரும் முட்செடிகள்கூட போதும். எனவே எதிர் காலத்தில் உணவுப் பயிர்களோடு  எரிபொருள் பயிர்கள் போட்டியிடும் என்ற அச்சம் வேண்டியதில்லை. மரப்பொருளிலிருந்து டீசல் எடுத்தால் ஒரு பேரல் 1920 ரூபாய் (ஒரு பேரல் 159 லிட்டருக்கு சமம்) தான். அதாவது லிட்டர் 12 ரூபாய். ஆஹா... எவ்வளவு சீப்!

மர டீசல்

இதில் அமெரிக்கா முந்திக் கொண்டுவிட்டது. ஆண்டுக்கு 100 கேல்லன் மரடீசலை உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் மரப்பொருளை எண்ணெயையாக்கிக் கொண்டிருக்கிறது. எந்த முயற்சியும் இல்லாமலே 34 பில்லியன் டன் மரப்பொருள்களை நம்மால் திரட்ட முடியும். அதிலிருந்து 160 பில்லியன் பேரல் மர டீசலைப் பெறலாம். உலகத்தேவை 30 பில்லியன் பேரல்பன்தான். நிச்சயம் உலகத்தேவைக்கு அதிகமாகவே மரடீசல்கள் கிடைக்கும். தீர்ந்துபோகும் என்ற பயமோ, உணவுதானியத் தட்டுப்பாட்டைத் தருமோ என்று அஞ்சவேண்டியதில்லை.

செல்லுலோஸ் – மரப்பொருள்

செடி, கொடி, மரம் ஆகியவை காய்ந்து போகும்போது அதிலுள்ள ஈரமும் சதைப்பகுதியும் வற்றி நீங்கியபின் எஞ்சியிருப்பது காய்ந்த குச்சியும், கட்டையும்தான். அது முழுக்க முழுக்க செல்லுலோஸôல் ஆனது. துணை செல்லுலோஸ் மற்றும் லிக்னின் என்ற பழுப்புப் பொருளும் அதில் சிறிது கலந்திருக்கும். அவைகளும் ஒருவகையில் செல்லுலோஸ்தான். வேர்க்கடலைத் தோல், கரும்புச் சக்கைப்போன்ற எல்லா கழிவுகளும் இதே செல்லுலோஸ்தான்.

கரையான் வயிற்றில் செல்லுலோஸ் கரைகிறது

நாம் கீரை, காய்கறிகளை சாப்பிடும்போது அதிலுள்ள செல்லுலோஸ் ஜீரணமானால் கொஞ்சம் சிதைந்த நிலையில் மலத்துடன் வெளியாகிகிறது. நம்மால் ஜீரணிக்க முடியாது என்பதால் செல்லுலோûஸ ஜீரணம் செய்யவே முடியாது என்று நினைக்க வேண்டாம். கரையான் மரத்தை அரித்துத் தின்று வளரக்கூடியது. ஆடுமாடுகள், புல். தவிடு வைக்கோலைத் தின்று ஜீரணித்து வாழ்கின்றன. ஆதலால் செல்லுலோஸ் ஜீரணமாகக்கூடிய பொருளே. உள்ளபடியே கரையான் வயிற்றிலும், ஆடு மாடுகளின் வயிற்றிலும் இருந்து அவை ஜீரணம் செய்ய உதவியாக இருப்பவை செல்லுலோஸ் செரிக்கும் பேக்டிரியாக்களே. இவற்றின் உதவியுடன் நாமும் உலைகளில் மரப்பொருள்களை டீசலாக்கலாம்.

மர டீசலுக்கு மூன்று வழிகள்

மரப்பொருளை மூன்று வழிகளில் டீசலாக்கலாம். இம்மூன்று வழிகளும் வேறுபடுவது மேற்கொள்ளப்படும் வெப்பத்தைப் பொருத்தது.

முதலாவது வெறும் 200 டிகிரி செ. யில் எத்தனாலாகப் மாற்றுவது. இரண்டாவது 600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் பயோ - குரூடாயிலைப் பெறுவது. மூன்றாவது 700 டிகிரி வெப்பத்தில் செல்லுலோசை நேரடியாக கேஸôக மாற்றுவது. செல்லுலோஸ் எத்தனை வலுவான பொருள் என்பதை தேக்கு மரம் சொல்லிவிடும். அத்தனை அழுத்தமாக ஆற்றல் அதனுள் திணிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஆற்றலை வெளியே எடுக்கவேண்டுமானால் கொஞ்சம் ஆற்றலை நாம் அதனுள் செலுத்த வேண்டும்.

செல்லுலோசானது இழைபோன்ற பொருள். ஒரு இழையில் ஆயிரக்கணக்கான குளுக்கோஸ் மூலக்கூறுகளால் சங்கிலியாகக் கோர்க்கப்பட்டிருக்கும். செல்லுலோஸ் இழையை வெப்பம், கெமிக்கல் அல்லது என்ûஸம் மூலம் உதிர்த்தால் மாலையிலிருந்து பூக்கள் உதிர்வதுபோல அதிலிருந்து குளுக்கோஸ் அல்லது அதனினும் சிறிய எரி மூலக்கூறுகள் கிடைக்கும். எண்ணெய், வாயு அல்லது டீசலாக அது கிடைக்கும்.

1. சீன்கேஸ்

இரண்டாம் உலகப்போரின்போது கார்பன் மோனாக்ஸைடு  ஹைட்ரஜன் வாயுவுடன் கலந்து சூடாக்கி எரிவாயுவை உருவாக்கினார்கள். ஃபிஷ்ஷர் திராப்ஷ் சிந்தசிஸ் (Fischer Tropsch synthesis FTS) என்பது அதன் பெயர்.

மரத்தூளை 700 டிகிரி வெப்பத்தில் நீராவியில் வேகவைக்கும்போது ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கார்பன் மோனாக்ஸைடும், ஹைட்ரஜன் வாயுவும் உருவாகும். இரண்டு வாயுக்களுடனும் கலந்துவரும் "தார்' போன்ற பொருளை நீக்கிவிட்டு 70 மடங்கு வளிமண்டல அழுத்தம் தந்து ஒரு வினையூக்கி ஃபில்ட்டரின் வழியாகப் பாய்ச்சும்போது விசேஷ நிகழ்ச்சியின் விளைவாக மீத்தேன் போன்ற எரிவாயு கிடைக்கும். இதை சின்கேஸ் என்பார்கள். இப்போதைக்கு இதற்காக ஆகும் செலவு கட்டுப்படியாகமலிருப்பதால் தக்க காலம் வரை பொருத்திருக்க வேண்டும்.

2. அழுத்தி சூடாக்கி மரடீசலாக்குதல்

உலகின் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை கேம்பிரிய காலம் என்பார்கள். அக்காலத்தில் கடலில் வாழ்ந்த பாசிகள் பூமிக்கடியில் படிந்து, அழுத்தத்தாலும், வெப்பத்தாலும் கருகி, நசிந்து எண்ணெய்யாக உருமாறிவிட்டன. இன்று அதை பெட்ரோலியம் என்றழைக்கிறோம். நிலத்தில் கிணறுவெட்டி அவற்றை எடுக்கிறோம். 500 மில்லியன் ஆண்டுகளாக நடந்த அதே நிகழ்ச்சியை செயற்கையாக தாவரங்கள் மீது பயன்படுத்தினால், அவற்றை பெட்ரோலிய எண்ணெயாக மாற்றலாம்.

மரப் பொருள்களை காற்று இல்லாத நிலையில் 300-600 டிகிரி செ. வெப்பத்திற்கு சூடு செய்வதால், அது கரியாகவும், எண்ணெய்யாகவும் கொஞ்சம் எரிவாயுவாகவும் மாறும். இது ஒரு மலிவான தயாரிப்பு முறை.

ஒரு லிட்டர் மரடீசல் தயாரிக்க ஆகும் செலவு வெறும் 6 ரூபாய்தான். இதனுடன் மரப்பொருளின் விலையைக் கூட்டிக் கொண்டால் டீசலின் விலை கிடைக்கும். வெறும் குப்பைக் கூளங்களை பயன்படுத்துவதால் விலை அத்தனை ஒன்றும் பெரிதாக இருக்காது.

வீட்டுக்குப் பக்கத்திலேயே மரடீசல் பாய்லரை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த மர ஆயிலை நேரடியாக எஞ்சினில் ஊற்றிப் பயன்படுத்தமுடியாது. குருட் ஆயிலை  சுத்திகரிப்பு செய்வதுபோல் செய்ய வேண்டும்  செய்தால் எஞ்சின்கள் நீண்டநாளுக்கு உழைக்கும்.

நிமிட நேரத்தில் பல லிட்டர் மர ஆயிலைத் தயாரிக்கும் முறை ஒன்று இருக்கிறது. மொத்த மரப் பொருளையும் ஒரு வினாடிக்குள் 500 டிகிரி சூட்டிற்கு கொண்டு செல்லவேண்டும். அப்போது செல்லுலோஸ் இற்றுப் போய், மிக மிக சிறு துண்டு மூலக்கூறுகளாக உதிரும். உதிர்ந்த மூலக்கூறுகளை வினையூக்கம் செய்யும்  சல்லடையில் நுழைக்கும்போது அது கேஸோலினாகவும், ஆக்டேன் வாயுவாகவும் மாறுகிறது. மொத்தத்திற்கும் 10 செகன்ட் நேரம்தான் ஆகிறது. சோதனைகளைத் தாண்டி 2014 ஆம் ஆண்டில் இது வணிக ரீதியாக வெளிப்படும்.

3. சக்கரை முறை

குளுக்கோஸ் மூலக்கூறுகளை வரிசையாக சங்கிலிப்போல் கோர்த்தால் அது செல்லுலோசாகிவிடும். தக்கமுறையில் சிûத்தால் செல்லுலோஸ் மீண்டும் குளுக்கோஸகக் கொட்டும். செல்லுலோசை குளுக்கோசாக உதிர்க்க கிட்டத்தட்ட 10 முறைகள் உள்ளன. மரப்பொருளை நேரடியாக காம்மாக் கதிர்களால் பொசுக்கலாம், கூழாக அரைத்து வேகவைத்து மாற்றலாம், அமிலம், காரம் அல்லது கரைப்பான் திரவங்களைப் பயன்படுத்திக் கரைத்துப் பெறலாம். இதெல்லாம் சரிப்படவில்லையெனில் ஜெனட்டிக் எஞ்சினிரிங் செய்யப்பட்ட நுண் உயிரிகளைப் பயன்படுத்தி செல்லுலோஸை நைசான குளுகோசாக மாற்றலாம்.

செல்லுலோசை அம்மோனியாவுடன் கலந்து 100 டிகிரியில் வேகவைத்தால்கூட குளுக்கோஸ் கிடைக்கும். அழுத்தத்தை ரிலிஸ் செய்ததும் அம்மோனியா மறுபடியும் ஆவியாகிவிடும். பின்னர் அதை திரவமாக்கி மறுபடியும்  உபயோகிக்கலாம். கிடைத்த குளூக்கோûஸ நொதிப்பு முறையில் எரிசாராயமாக மாற்றிக் கொள்ளலாம். பட்ஜெட் போட்டுப் பார்த்தால், லிட்டர் சாராயத்தின் விலை ரூபாய் 12 தான். பெட்ரோல் பங்குகளுக்கு வரும்போது லிட்டர் 24 ரூபாயாக இருக்கும்.

நாளை நிச்சயம்

இப்போதைக்கு பெட்ரோலுடன் போட்டியிட செல்லுலோஸினால் முடியாது என்பது உண்மையே. பெட்ரோலியம் இப்போது சுலபமாகக் கிடைக்கிறது.ஏற்கனவே அதற்கு இடப்பட்ட முதலீடுகளின் பயனைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய தொழில் நுட்பத்திற்கு சான்ஸ் இல்லை. மர டீசலுக்கு முதலீடு செய்ய ஆரம்பித்தால் அதன் பலன் கிடைக்கக் கொஞ்சக் காலம் ஆகும். அதுவரை கேஸோலினுடன் அது போட்டியிட முடியாது.

மரடீசலுக்கு எதிர்காலம் இருக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு எதிர்காலம் தேய்ந்து கொண்டிருக்கிறது. மரடீசலை குடிசைத் தொழில் போல சமானியர்களும் தயாரிக்கலாம். வெளிநாட்டை நம்பியிருக்கத் தேவையில்லை. கச்சா மரப் பொருளை அக்கம்பக்கத்திலுள்ள தோட்டக் கழிவிலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம்!

மறுபடியும் சுள்ளி பொறுக்கும் காலம் வரத்தான் போகிறது. சுள்ளி எண்ணெயாகப் போகிறது.

செல்லுலோசுக்கு எங்கே போவது?

முள் மரங்கள்

செல்லுலோஸ் பெறுவதற்கு உகந்த மரம். கட்டிடம், மர சாமான்கள் போன்றவை செய்வதற்கு உதவாத புதர் மரங்களிலிருந்து செல்லுலோசைப் பெறலாம். தமிழகத்தில் காட்டுத்தனமாக வளரும் வேலிக்காத்தான் முள் மரங்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

வேளாண் கழிவுகள்

அறுவடை செய்த பிறகு மண்ணில் நிற்கும் கழிவுகள், இலைகள், வைக்கோல், காய்கறி கழிவுகள், தூக்கி வீசும் தண்டுகள் குச்சிகள் எதுவானாலும் அதிலிருந்து செல்லுலோசைப் பெறலாம். கரும்புச் சக்கையை எரித்து வீணாக்குவதை விட அதை செல்லுலோசாக மாற்றிப் பயன்படுத்தவது நல்லது.

செல்லுலோஸ் பயிர்கள்

மாடுகளுக்கு தீவனமாக வளர்க்கும் சோளக் கதிர்கள், கோரைப் புல், காட்டுப் புல் போன்ற புல், பூண்டுகளை பயிர் செய்யலாம். இவை பல்லாண்டுப் பயிர்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெட்டி எடுக்கக் எடுக்க அவை வளர்ந்துகொண்டே இருக்கும். உணவுப் பயிர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை பாதிக்காமல், தரிசல் நிலங்களைப் பயன்படுத்தி இவற்றை வளர்க்கலாம்.

செல்லுலோஸ் என்பது என்ன?

செல்லுலோஸ் என்பது மரப்பொருள். அதனால் மரத்திலிருந்துதான் இதைப் பெறமுடியும் என்று நினைக்க வேண்டாம்.  எந்த செடி, கொடியிலிருந்தும் இதைப் பெறலாம். மிகவும் மலிவானது வனத்திற்கு எந்த ஊறும் விளைவிக்காத சாதாரண புல், பூண்டுகள்தான். உரம்  போட்டு வளர்க்க வேண்டியதில்லை. பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டியதில்லை.

செல்லுக்கு உள்ளே

செல்லின் வெளிச்சுவர் முழுவதும்  செல்லுலோஸôசால் ஆனது. செல்லுலோஸ் கற்றை கற்றைகளாக குறுக்கும் நெடுக்குமான வேயப்பட்டிருக்கிறது. இடையே இணை செல்லுலோஸ் என்ற இன்னொரு வகை இழை பசைப்போல செல்லுலோஸ் பின்னலை கெட்டிப் படுத்துகிறது. காய்ந்த செடி, கொடிகளை அமிலம் அல்லது காரத்துடன் வெப்பம் கொடுத்தால் கட்டை குச்சிகளிலிருந்து செல்லுலோஸ் இற்றுப்போய் தனியாகப் பிரிந்து வந்துவிடும்.

ஒரு தனி செல்லுலோஸ் இழைக் கற்றை

செல்லுலோஸ் கற்றைப் படிகம்ப் போன்றது. தொடர்ச்சியாக குளுக்கோஸ் மூலக்கூறுகள் மணிமாலைபோல் இணைந்து இழையை உருவாக்குகின்றன.  மிகவும் வலுமிக்க இந்த இழையை சுலபமாக உதிர்க்க முடியாது. உதிர்த்தால் அதிலிருந்து சக்தி மிக்க மூலக்கூறுகள் கிடைக்கும்.

செல்லுலோசின் அடிப்படை

ஆயிரக்கணக்கான குளுக்கோஸ்  மூலக்கூறுகள் மணிபோல் கேர்க்கப்பட்ட அமைப்புதான் செல்லுலோஸ். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா நோயர்களே இரத்தத்தில் செலுத்தும் குளுக்கோஸேதான் மரத்திலும் பஞ்சிலும் காகிதத்திலும் இருக்கிறது.

செல்லுலோசை நேரடியாக எண்ணையாக மாற்றும் முறை

செல்லுலோஸ் குளுக்கோசால் ஆனது, குளுக்கோசில் உள்ளவை ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் கார்பன். ஆக்சிஜனை மட்டும் இந்தக் கூட்டத்திலிருந்து அகற்றிவிட்டால் நமக்கு ஆற்றல் செரிவு மிக்க எரிபொருளாக செல்லுலோஸ் மாறிவிடும். இந்த எரிபொருளில் வெறும் கரியும் ஹைட்ரஜனும் மட்டுமே இருக்கும்.

முதலில் செல்லுலோசை ஒரு உலையில்ப் போட்டு ஒரு சில வினாடிகளில் அதன் வெப்பத்தை 500 டிகிரி செல்சியசுக்கு உயர்த்த வேண்டும். ஆக்சிஜன் நிரம்பிய சிறு சிறு மூலக்கூறுகளாக செல்லுலோஸ் உதிரும்.

அடுத்ததாக, மூலக்கூறுகள் மட்டும் புகும் அளவுக்கு துளைகளைக் கொண்ட சல்லடைப் பொருளின் வழியாக உதிர்ந்த மூலக்கூறுகளை புகுத்த வேண்டும்.  இந்த சல்லடைபோன்ற கிரியாவூக்கியின் வழியாக புகும்போது மூலக்கூறுகளின் ஆக்சிஜன் நீங்கிவிடும். முடிவாக வளையம்போன்ற கார்பன் சங்கிலி மூலக்கூறுகள் கிடைக்கும். உண்மையில் என்னென்ன கெமிக்கல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பது சரியாக இன்னும் தெரியவில்லை.

முடிவாக, பெட்ரோலில் காணப்படும் கேசொலின் மூலக்கூறுகளைப்போன்ற பொருள்விளைகிறது. இத்தனை நிகழ்ச்சிக்கும் எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில வினாடிகள் தான்.

-முனைவர் க.மணி 

Pin It