சர்க்கரை ஆலைக்கு ஒருமுறை போய்ப் பாருங்கள். எப்படி சர்க்கரை தயாரிக்கிறார்கள் என்று.

                அதைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, சர்க்கரை பயன்படுத்துவதையே நீங்கள் நிறுத்திவிட்டாலும் நிறுத்திவிடுவீர்கள். காரணம் பழுப்பு நிற சர்க் கரையை வெளுப் பாக ஆக்குவதற்கு பல ரசாயன பொருட்கள் அங்கு பயன்படுத்தப் படுவதை நீங்கள் பார்க்க நேரிடும்.

                இதை நீங்கள் நேரில் பார்த்த பிறகு, சர்க்கரையை நீங்கள் உபயோகப் படுத்த தயங்குவீர் கள். விதவிதமான இனிப்புப் பண்டங் கள் மற்றும் காபி, டீ, ஐஸ்க்ரீம், ஜாம் போன்றவைகளுக்கு எல்லாம் சர்க்கரை சேர்க்காமல் நமக்கு சாப்பிடவே பிடிக்காது. இவற்றிற்கு சுவை தருவதே சர்க்கரைதானே?

                ஆனால் அந்த சர்க்கரையை வெள்ளை யாக்குவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றபோது, அந்த சர்க்கரையை நாம் தொடலாமா?

                சாக்பவுடர், கார்போனிக் வாயு, சல்பர் டையாக்சைட், ஸ்ட்ரோடையம், ஹைட்ராக் சைட், சல்ஃப்யூரிக் ஆசிட் போன்ற பல விதமான ரசாயன பொருட்களின் மீது சர்க்கரை திரவம் உரசிக் கொண்டு போகும் போதுதான், அது ‘பளிச்’சென வெண்மையாகிறது.

                ஆகவே, இந்த சர்க்கரையை உட்கொள்வதன் மூலம் இந்த ரசாயனப் பொருட்கள் நம் ரத்தத்தில் கலந்து விடுகின்றன. இந்த ரசாயனப் பொருட் களினால் என்ன கெடுதல்கள் என்று தெரியுமா?

                நம்முடைய உடலிலுள்ள அவசியமான சத்துப் பொருட்களும், வைட்டமின்களும் இந்தரசாயனப் பொருட்களினால் கரைந்து போய் விடுகின்றன. இது ஆராய்ச்சியில் தெரிய வந்த ஒரு உண்மையாகும்.

இதனால் நம்முடைய உடலிலுள்ள ஜீவ உறுப்புகள் சத்து பற்றாக்குறையினால் நோய்க்கு ஆளாகின்றன.குறிப்பாக கல்லீரல் சரியாக வேலை செய்வதில்லை. ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. இதனால் பல நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன.     

                 ஜலதோஷம், ஜுரம், இருமல் இவைகள் சுலபமாக தொற்றிக் கொள் கின்றன. இனிப்பு அதிகமாக சாப்பி டும் குழந்தைகளி டம் இத்தகைய நோய் தொற்றுகள் சுலபமாக ஏற்படு வதை நீங்கள் பார்க் கலாம்.

                 வைட்டமின் ஆ சத்தானது மூளை நன்றாக வேலை செய்வதற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு சத்துப் பொருளாகும்.அதிகமாக சர்க்கரைப் பண்டங்கள் உண்பவர்கள், இந்த வைட்டமின் ஆ சத்தை இழந்து விடுவார்கள். அதனால் மூளையின் திறன் குறைந்து போகிறது. இதனால் ஞாபகசக்தி குறையும். அல்லது ஒரு விஷயத்தை விரைவாக புரிந்து கொள்வதில் தாமதமேற்படும்.

     அதே போல, வைட்டமின் இ-யும் மற்ற சத்து பொருட்களும் உடலில் குறைந்து போவதால், பற்கள் குழி விழுகின்றன. சொத்தைப் பிடிக் கின்றன.

     நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், பற்களை நாம் தினசரி பல் துலக்கி பராமரித்துக் கொண்டிருக்கி றோமே, சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே, நமக்கு ஏன் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தன என்று.

     ஆனால் இந்த சர்க்கரை மறைந்திருந்து உங்களுக்கு வில்லனாக செயல்படுவதை நீங்கள் அறியமாட்டீர்கள்.

     நீங்கள் தினசரி 2 முறையோ மூன்று முறையோ பல் துலக்கினாலும் சரி, பல் டாக்டரை அடிக்கடி கலந்தோலோசித்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் சரி, சர்க்கரை எந்த அளவுக்கு உடலுக்கு செல்கிறதோ, அந்த அளவுக்கு அது பற்களுக்கு தேவையாக இருந்து வரும் சத்துப் பொருட்களை இந்த ரசாயனப் பொருட்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. அதற்கு பிறகு பற்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும்?

     சர்க்கரை உங்களுக்குத் தெரியாமல் உடலுக்குள் போய்க் கொண்டேயிருக்கிறது.தினசரி நீங்கள் சாப்பிடும் காபி, டீ, பழரசங்கள், இனிப்பு பண்டங்கள், ஜாம் என்று ஒரு நீண்ட பட்டியலே போடலாம். இதை இப்படி நீங்கள் குறைக்கப் போகிறீர்கள்?

     ஒரு முறை ஒரு டி.வி. விளம்பரத்தில் கரப்பான் பூச்சிகள் பழுப்பான சர்க்கரையில் சூழ்ந்து கொண்டிருப்பதையும், ப்ளீச்சிங் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையில் கரப்பான் பூச்சிகளே இல்லாமல் இருப்பதையும் படம் பிடித்து காட்டியிருந்தார்கள்.

     “பாருங்கள், வெள்ளைச் சர்க்கரை தூய்மையானது. அதில் கரப்பான் பூச்சிகளே வராமல் இருப்பதையும் கவனியுங்கள். ஆகவே வெண்மையாக்கப்பட்ட இந்த சர்க்கரையை வாங்கி உபயோகியுங்கள்” என்பதுதான் அவர்களுடைய செய்தி.

     ஆனால் உண்மை நிலை வேறுவிதமானது. வெள்ளைச் சர்க்கரையில் ரசாயனப் பொருட்களின் தாக்கம் இருப்பதால்தான் கரப்பான் பூச்சிகள் அங்கு வருவது இல்லை.

     பழுப்பு நிற சர்க்கரை இயற்கையானது. ரசாயனப் பொருட்களினால் அவை ப்ளீச்சிங் செய்யப்பட்டவை அல்ல. அதனால்தான் அங்கு கரப்பான் பூச்சிகள் வருகின்றன. ஆகவே இந்தப் பழுப்பு சர்க்கரை கெடுதல் செய்யாதவை. (ஆனால் கடைகளில் கிடைக்காது. என்ன செய்வது?)

     இந்த கரப்பான் பூச்சிகளுக்கு தெரிந்துள்ள விஷயம் கூட, மனிதர்களுக்கு தெரியாமல் இருக்கிறதே பார்த்தீர்களா? ரசாயனப் பொருட்கள் நுட்பமான அளவில் வெள்ளைச் சர்க்க ரையில் கலந்துள்ளதால்தான், கரப்பான் பூச்சிகள் இந்த வெள்ளைச் சர்க்கரையிடம் வருவதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் இதை தெரிந்து கொள்ளாமல் அதை உண்கிறோமே, சரியா?

     ஆகவே இவற்றை தெரிந்து கொண்டு இனியாவது கவனமாக இருங்கள். சர்க்கரையின் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது முடிந்தால் சர்க்கரைக்குப் பதிலாக பனை வெல்லம், பனங்கற்கண்டு ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

  - நன்றி : ஏழாவது அறிவு - 7ஆம் பாகம் டிச 2011

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)

Pin It