நிம்போமேனியா - இது என்ன?
பெண்களிடம் காணப்படும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை “நிம்போ மேனியா” என்கிறோம். பெண்களின் பாலியல் விருப்பம் இல்லாமை என்பது ஒரு செக்ஸ் குறைபாடோ, அது போல அதிக காம உணர்வும் ஒரு குறைபாடு தான். இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் அற்புதமான தீர்வுகள் உண்டு.
உங்களுடைய செக்ஸ் நடவ டிக்கைகள் சாதா ரணமானவை யாக இல்லை என உணர்கிறீர் கள். ஆனாலும் அது செக்ஸ் அதிக காமமாக இருப்பதாக தெரிய வேண்டுமா? கீழ்கண்ட கேள்விகளை உங்களுக்குள் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
• எப்பொழுதும் செக்ஸ் நினைப்பாகவே இருக்கிறதா? செக்ஸ் தொடர்பான புத்தகங்கள், கதைகள், படங்கள் அடிக்கடி பார்ப்பவரா?
• பகல் கனவு அதுவும் செக்ஸ் பற்றியே கனவு காண்பவரா?
• அதிகளவு செக்ஸ் வேட்கை காரணமாகவோ, ஆண்கள் தொட்டாலோ பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுபவரா?
• உடலுறவுக்கு பின்பும் தனியாக காம ஆசை இருக்கிறதா?
• இளம் பெண்களுக்கு தாங்கமுடியாத செக்ஸ் வேட்கை, ஒவ்வொருவரையும் கட்டி அணைக்க ஆசை ஏற்படுகிறதா?
• செக்ஸ் பற்றி பேசுவதில் அதிகமாகக் கிளர்ச்சியடைபவரா?
• மாமூலான மற்ற வேலைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் அளவுக்கு உங்களது செக்ஸ் ஆர்வம் விஸ்வரூபம் எடுக்கிறதா?
• அளவுக்கதிக செக்ஸ் ஆர்வத்திலிருந்து விடுபட நீங்கள் ஏதேனும் முயற்சி மேற் கொண்டு அது தோல்வியடைந்திருக்கிறதா?
• உங்கள் அசாதாரண செக்ஸ் நடவடிக்கைகள் உங்கள் குடும்பத்தினர் நெருங்கிய தோழிகள் போன்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பதில் “ஆமாம்” என்று இருந் தால் உங்களுக்கு அதி காமம் நிம்போமேனியா இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
உடலுறவின்போது எளிதில் திருப்திப்படுத்த முடியாதவர்களையும் நிம்போமேனியாக்கள் என்று சொல்லலாம். உடலியல் காரணங்களை விட உளவியலே இதற்கு முக்கியக் காரணம் ஏக்கம், தனிமையுணர்வு ஆகியவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பெண் அதிகக் காம ஆவேசம் காட்டுகிறாள் என்று உளவியல் சொல்லுகிறது.
முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் ஆர்வம் என்பது அபூர்வமானது. மறைவிடப் பகுதியில் வீக்கம், கிளிட்டோரியஸின் அதிக வளர்ச்சி, பெண் ஹார்மோன்களின் அதிகச் சுரப்பு போன்றவை மூலம் இது உண்டாகலாம். மறை விடப் பகுதியில் ஏற்படும் நமச்சல், சொறி, அரிப்பு போன்றவை தொடர் உடலுறவுக்குத் தூண்டலாம். இரத்தக் கசிவுக்கும் புற்றுநோய்க்கும் சிகிச்சைக் காகச் செலுத்தப்படும் ஹார்மோன்களின் அதிகமான உபயோகமும் அதிகப் பாலியல் எண்ணத்தை ஏற்படுத்தும். சிறுநீரகச் சுரப்பிகள், தைராய்டுச் சுரப்பிகள் ஆகியவற்றின் அதிகச் செயல்பாடு மிகுதியாலும் செக்ஸ் எண்ணம் உருவாகலாம்.
சோம்பல் நிறைந்த, கவலை இல்லாத அறிவு பூர்வமான கட்டுப்பாடுகள் இல்லாத பெண் களையும் நிம்போமேனியா-க்கள் என்று தவறாக நிணைப்பதுண்டு. அடிக்கடி இணையை மாற்றும் பெண்கள் நிம்போமேனியா என்று சொல்ல முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதுபோல கணவனிடம் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் உடலுறவு கொள்ள வேண்டுபவர்களும் மிகுதியான காம உணர்வு உள்ளவர்கள் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. அவர்களது காம உணர்வை தெரிந்து கணவர் செயல்பட தெரியாததால் இவர்கள் மீண்டும் உறவு கொண்டு முழு திருப்தியடைய ஆசைப்படலாம். இதை கணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தான் அன்பு செலுத்தப்படாத நபர் என்ற உணர்வினால் தொடர்ச்சியான தொடர்புகள் மூலம் அன்பைத் தேடுவதே பெரும்பாலும் நிம்போமேனியா-க்கள் செய்கிற காரியம் என்றே மனோதத்துவ நிபுணர்கள் சொல்லுகிறார்கள். காம உச்சத்தை அடைவதற்கான தகுதி இல்லா மையே பெண்களை அதற்கான உந்துகிறது என்று சிலர் கருதுகிறார்கள். இது பற்றி விரிவான ஆய்வுகள் நடந்துவருகிறது.
வரலாற்றில் நிம்போமேனியா
அதிக செக்ஸ் ஈடுபாடு என்பது நேற்றோ இன்றோ ஏற்பட்டது அல்ல. இது பல வரலாற்று ஆய்வு ஏடுகளை புரட்டிப் பார்த்தால் பழங்காலம் தொட்டே இந்த நிம்போமேனியாக்கள் இருந்திருக்கிறார்கள்.
அதிக ஆண்களை படுக்கையில் வீழ்த்திய முதல் பெண்ணாக கருதப்படுபவர் ரோம பேரரசர் அகஸ்டசின் மகள் ஜூலியா தான். அழகு, அறிவு, படிப்பு என்று எல்லா திறமையும் இருந்த அவர் செக்ஸ் காமத்திலும் மிக மிஞ்சிய ஆர்வம் கொண்டிருந்தார். ஒன்றிரண்டாக ஆரம்பித்த இவரது காதலர்களின் எண்ணிக்கை கணக்கிடமுடியாமல் சென்றது. ரோம் நகரில் வாழும் இளைஞர்களில் பாதிக்கு மேல் இளவரசியோடு இரவை கழித்தவர்களாகவே இருந்தார்கள். இவரோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியதாம்.
இரண்டாவது இடத்தில் 18-ம் நூற்றாண்டு பிரெஞ்ச் நடிகையான மெல்லி துபோய்ஸ் வருகிறார். 20 ஆண்டுகளில் தான் சந்தித்த எல்லா ஆண்களைப் பற்றிய விவரங்களையும் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அவரது காதலர்களின் எண்ணிக்கை 16, 527. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று ஆண்களை கட்டிலில் சந்தித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பவர் ரோம பேரரசி வலேரியா மெசலீனா. இவர் பேரரசர் கிளாடியசின் மனைவி. தொடக் கத்தில் அரசி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அரண்மனை ஊழியர்களை படுக்கைக்கு அழைத் தார். இவர் ஒரு நாளில் விலைமாது ஒருவருடன் போட்டி வைத்து ஆண்களுடன் உறவு கொண்டார். அதில் 24 மணி நேரத்தில் 25 ஆண்களுடன் உறவு கொண்டு உள்ளார்.
நான்காவது இடத்தில் வருபவர் 1934 ல் புகழ்பெற்று விளங்கிய பிரெஞ்ச் நடிகை பிரிஜிட்டி பார்டட். ஒவ்வொரு இரவும் எனக்கு ஒரு புது துணை வேண்டும் என்று வெளிப்படையாகவே பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தவர். 20 வயது முதல் 40 வயது வரை இவர் சந்தித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 5 ஆயிரத்தை தாண்டியது.
இதெல்லாம் எப்படி சாத்தியம்? இந்த கணக்கு எல்லாம் எப்படி என்றால் 16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பமானவர் களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். அவர் களுக்குள் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் இல்லை. அதனால்தான் இப்படி பகிரங்க அறிவிப்புகளெல்லாம் சாத்திய மாயிற்று.
நிம்போமேனியாவை முழுமையாக சரிசெய்யும் “ஹோமியோ” மருந்துகள் :
மேற்கண்ட வரலாற்று பட்டியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் தனது அதி காம உணர்வு இருக்கிறது என தெரிந்து அருகிலுள்ள ஹோமி யோபதி மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றிருந் தால் இந்த பட்டியலில் அவர்கள் பெயர்கள் இடம் பெறாமல் செய்திருக்கலாம். அவர்கள் தவறிவிட்டார்கள் போலும். நிம்போமேனியாவை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளது. சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதிக காம உணர்வு கட்டுப்பட்டு இயல்பான செக்ஸ் உணர்வை பெறுவார்கள்.
நிம்போமேனியாவை சரிசெய்யும் சில ஹோமியோ மருந்துகள் பிளாட்டினா, மூரக்ஸ், ஓரிகானம், ஸ்டாபிசாக்ரியா, அபிஸ்மெல், பிளாட்டினா, பாஸ்பரஸ், கோனியம், நேட்ரம் மூர், ஸ்டிரமோனியம், சல்பர், ஜிங்கம்மெட் போன்றவை. அனுபவமும், தகுதியும் நிறைந்த ஹோமியோபதி மருத்துவர்களை சந்தித்து தீர்வு பெறலாம்.
(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)