வயோதிகப்பருவத்தை உளவியல் துறையால் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 60 முதல் 70 வயது வரை ஆரம்ப வயோதிகப் பருவம், 70 வயதிற்கு மேல் முதிர்ந்த வயோதிகப் பருவம் என்றும் குறிப்பிடப் படுகின்றது.
வயோதிகப் பருவத்தின் பண்புகள் :
உடலாலும் மனதாலும் மாற்றங்கள் ஏற்படு கின்றன. சமூகத்தில் பங்கு கொள்வதும், ஆளுமையும் குறைந்து காணப்படுகின்றது. ஒரு சிலர் 60 வயதிற்குப்பின்னரும் இதே சுறுசுறுப்புடன் வாழ்வதைக் காணமுடிகின்றது. மற்றும் சிலர் ஓய்வு பெற்றுவிட்டோம் என்று அமைதியாக காலம் கழிக்கின்றனர்.
உடல் மாற்றங்கள் :
இதயம், நுரையீரல், விதைப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகம் போன்றவை தளர்ச்சியுற ஆரம்பிக்கின்றது. வயதிற்கு தகுந்தாற்போல் இதயத் தின் எடையும் உடல் எடையும் குறைந்தும் ஜீரண உறுப்புகள், சிறுநீரகம் மற்றும் உடல் தசைகளும் பாதிக்கப்படுகின்றது.
மூக்கு நீண்டு பற்கள் விழுந்து விடுவதால் முகத்தோற்றம் மாறுபடுகின்றது.
கண்கள் மந்தமாகவும் நீர் நிரம்பியும் காணப்படுகின்றது.
கன்னங்கள் சுருக்கத்துடன் தோன்றும்.
தோலில் சுருக்கத்துடன் மருக்கள் தோன்றும்.
முடி குறைந்து வெண்மை நிறமாக மாறும்.
தோள்பட்டை கூன் விழுந்து அடி வயிறு பெரிதாக தோன்றும்.
புட்டம் தொளதொளவென்று மாறும்.
பெண்களின் மார்பகங்கள் தளர்ச்சியுறும்.
கால்களில் நரம்புகள் புடைத்துக் கொண்டு பாதங்களில் ஆணிகால் தோன்றும்.
நாடித்துடிப்பும் சுவாசமும் மாறுபடும்.
சிறுநீர் குறைந்தும் தூக்கத்தின் அளவும் குறையும்.
வயோதிகர்களால் கடின வேலைகளை செய்ய இயலாது அத்துடன் அதிக உஷ்ணத்தையும் அதிக குளிரையும் தாங்க இயலாது.
உணர்வு உறுப்புகள் :
கண் தூரப்பார்வை தோன்றும், அதிக நேரம் கண்ணை உபயோகிக்க முடியாது.
கேட்டல் :
பெண்களைக்காட்டிலும் ஆண்களுக்கு கேட்பது சற்று குறைந்து காணப்படும்.
பால்உணர்வு :
உடலுறவில் ஆவல் இருக்கும். ஆனால் ஆண்மை குறைவாக இருக்கும்.
மனமாற்றங்கள் :
தோற்றமும் அழகும் குறைவதால் மற்றவர்கள் வெறுக்கத் தொடங்குகின்றார்கள்.
ஞாபக மறதி, புதிய பெயர்களை புரிந்து கொள்வதில் சிரமம் புதிய முயற்சிகளை மேற் கொள்ள முடிவதில்லை.
தாழ்வுமனப்பான்மை அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது குறைகின்றது.
பொருளாதார வருவாய் குறைவதால் மனம் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.
இரத்த ஓட்டம் குறைகின்றது. கீல் வாதம், (முழங்கால் முழங்கையில் வலி) கட்டிகள் இதய வியாதி இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தோன்றுகின்றது.
வருவாய் குறைவதால் சத்தான உணவை உண்ண முடியாமல் உடல் நலம் பாதிப்படைகின்றது.
திருமணமாகாதவர்களைக் காட்டிலும் திருமணமானவர்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாக வும் உள்ளனர்.
இதுவரை உளவியல் துறையில் கூறப் பட்டதை பற்றி பார்த்தோம். இனி ஹோமியோபதியில் வயோதிகர்களின் பிரச்சனைகள் என்ன அதற்காக மருந்து காண் ஏட்டில் கூறப்பட்டுள்ள மருந்துகள் என்ன என்பதை சுருக்கமாக காணலாம்.
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)