பெரியம்மை தாக்காமலிருக்கப் பிணியிலிருந்து முழுநிறை தடைகாப்பு ஏற்பட நோய் எதிர்ப் பொருள் (Antibodies) வளர்வதற்கு உடல் அனுமதி தருமாறு, நாம் பெரியம்மைக்கு எதிராக அம்மை குத்திக் கொள்கிறோம். உண்மையில் அம்மை குத்திக் கொள்வது அல்லது நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது (inoculation) என்பது நோய் உண்டாக்கும் உயிர்ப் பொருளை அல்லது அதன் நச்சுப் பொருளை ஒருவனுக்கு ஊசி வழி உட் செலுத்துவதாகும். இந்த உயிர்ப் பொருள் வேதியியல் அல்லது இயற்பியல் முறையில் மாற்றப்பட்டு எவ்விதத் தீமையோ சிதைவோ ஏற்படாதவாறு உடம்பின் தடைகாப்பு உறுதிக்காகத் தற்காப்புப் பொருள்களை (immunizing defences) விளைவிக்கிறது. இவ்வாறான மாற்றப் பட்டுப் பண்படுத்தப்பட்டவற்றையே நோய்தடுப்புச் சத்து நீர் (vaccines) என நாம் அழைக்கிறோம்.

பெரியம்மைக்கு எதிராக அம்மை குத்துதல் முதலில் கீழை நாடுகளிலேயே செயல்படுத்தப்பட்டது. பெரியம்மை சிறிதே தாக்கப்பட்டோரின் கொப்புளங்களிலிருந்து (blisters) எடுக்கப்பட்ட நச்சுப் பொருள் நோய் தாக்காமல் காப்பாற்றப்பட வேண்டியவரின் மேற்கையின் உட்செலுத்தப்பட வேண்டும். இதனால் மிகச் சிறிய அளவில் பெரியம்மை நோய் தாக்கமாகி உடல் நோய் எதிர்ப்புப் பொருளைச் சமைத்துக் கொள்ள இயலுகிறது.

1721 ஆம் ஆண்டில் லேடி மேரி வொர்ட்லி மாண்டேகு (Lady Mary Wortley Montagu) என்பவர் துருக்கியில் (Turky) தூதுவராயிருந்தார். அவருடைய மனைவியார் தம்முடைய சொந்தக் குழந்தைகளுக்குக் கான்ஸ்டாண்டி நோபிலில் (Constantinople) நோய் தடுப்பு ஊசி போட்டமையே இங்கிலாந்தில் அம்மை குத்தலை அறிமுகமாக்கியது. ஆயினும் இந்த முறையே நோயைக் கடுமையாக எதிர்த்துக் கொல்லுதற்குரிய பயனைத் தரவல்லதாயிற்று.

edward_jenner_250அடுத்து டாக்டர் எட்வர்டு ஜென்னர் (Dr. Edward Jenner) என்பவர் 1796 ஆம் ஆண்டில் பசு அம்மை (Cow pox) (பெரிய அம்மை ஒத்த மென்பதமான நோய்) நோயால் துன்புற்றுக் கொண்டிருந்த இடைப் பெண் (dairy maid) சாரா நெல்ம்ஸ் (Sarah Nelmes) என்பவளுடைய மேல்கையிலிருந்து எடுக்கப்பெற்ற நஞ்சுப் பொருளை ஜேம்ஸ் பிப்ஸ் (James Pipps) என்னும் பையனுக்கு ஊசி செலுத்தியமை இரண்டாம் படியாகும். சில மாதங்கள் கழித்து அவர் ஜேம்ஸ்பிப்சுக்குப் பெரியம்மை குத்தினார். ஆனால் அந்தப் பையனை நோய் தாக்கவில்லை.

1798 ஆம் ஆண்டில் ஜென்னர் அவருடைய சோதனைகளையும் அம்மைகுத்து மருத்துவத்தையும் பற்றி நூல் வெளியிட்டு உலக முழுமையும் அது பரவுமாறு செய்தார். இந்த நோய்த் தடுப்பு ஊசி குத்தல் பல நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. கக்குவான் இருமல், தொண்டை அழற்சி நோய் ஆகிய சிக்கல்களைக் கொண்ட நோய்களுக்குட்படும் குழந்தைகளுக்கும் இளம் சிறார்களுக்கும் தடுக்கும் பொருட்டு தடைக்காப்பாக இவ்வகை நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டது. இளம்பிள்ளைவாதம் (Poliomyelitis), காலரா, மஞ்சள் காய்ச்சல் (yellow fever) நச்சுக் காய்ச்சல் (டைபாயிடு) ஆகிய ஆபத்தான நோய்கள் இந்த மாதிரியான நோய்த்தடுப்பு ஊசிகளால் கட்டுப்படுத்தப்பட்டன.

Pin It