குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் பலதரப்பட்டவை. பொதுவாக அவற்றை நீலநிறமாக்கும் பிறவி இருதய கோளாறுகள் மற்றும் நீலநிறமில்லாத பிறவி இருதய கோளாறுகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அதன் அடிப்படையில் அவை குழந்தைகளின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை சரிசெய்வதற்கான தீர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

நீலநிற பிறவி இதயக் கோளாறுகள் - Cyanotic CHD PDA - PATIENT DUCTUS ARTERIOUS

இருதயத்தில் இருந்து நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரண்டு முக்கிய குழாய்களான Pulmonary Arteru மற்றும் arota இவற்றுக்கும் இடையே உள்ள தேவையேற்ற குழாய் போன்ற அமைப்பையே PDA என்று சொல்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி சளி தொந்தரவு, மூச்சுத் திண்றல், வளர்ச்சியின்மை என்று சொல்லக் கூடிய தொற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கே கூட ஆபத்தான நிலை ஏற்படலாம். இந்த நோயை 2D Echo & Color Doppler என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். வயது 3 முதல் 6 மாதத்தை தாண்டிய நிலையில் இதை பல வகைகளில் சரி செய்து கொள்ளலாம். நெஞ்சில் பக்கவாட்டில் ஆபரேஷன் செய்து சரிசெய்து கொள்ளலாம். தொடை வழியாக சென்று ஆபரேஷன் இல்லாமல் மற்றும் Device போட்டு அந்த PDA என்ற தேவையற்ற சந்திப்பை சரிசெய்து கொள்ளலாம்.

இருதயத்தில் மேலறை ஓட்டை

இதய வலது மேலரை மற்றும் இதய இடது மேலறை இடைப்பட்ட துவாரத்தையே ASD ( ATRICAL SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால் அவதியுறும் குழந்தைகள் அடிக்கடி சளி மற்றும் மூச்சுத் திணறல், போதிய வளர்ச்சியின்மை மற்றும் நுரையீரலுக்கு செல்லும் இரத்த குழாயில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த நோயையும் எக்கோ மற்றும் கலர் டாப்ளர் மூலம் கண்டறிந்து ஆபரேஷன் மூலம் அல்லது தொடை வழியாக சென்று ASD Device என்று சொல்லக்கூடிய குடை போன்ற விரிப்பை துவாரம் உள்ள பகுதியில் விரியச் செய்து ஆபரேஷன் இல்லாத முறையிலும் சரிசெய்து கொள்ளலாம்.இந்த வயதிற்குள் சரி செய்து கொள்வது நல்லது.

இருதய கீழறை ஓட்டை

இருதயத்தில் இடது வெண்டிரிக்கிள் மற்றும் வலது வெண்டிரிக்கிள் இடைப்பட்ட துவாரத்தையே VSD (VENTRICULAR SEPTAL DEFECT) என்று சொல்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மீண்டும் மீண்டும் சளித்தொந்தரவு மற்றும் தொற்று நோய் ஏற்படும்.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்