சிந்தனையின்றி
சிறிது நேரம்
ஒற்றைப் புள்ளிக்குள்
ஓராயிரம கோடி ஒளி வேகததில்
தடுமாற்றமின்றி
நழுவிக்கொண்டு.........
எங்கு போகிறோம்
என்கிற கேள்வியை
புள்ளிக்கு வெளியே
பரிதவிக்க விட்டபடி
கணநேரமா
கற்ப காலமா
என்பதை கணிக்கும்
திறமை இழந்தவனாய்
ஒப்பிட்டு பார்க்க
ஒன்றுமற்ற
கொடுத்து வைத்த
ஏழையாய்.......
கால வெளியை
தரிசித்தபடி
முடிவற்ற எதற்குள்ளோ
மேலேயா கீழேயா
என்றறியா இடையீடன்றி
பயனிப்பவனை
பார்க்க முடியாமல்
உணர்ந்தபடி........
திரும்பிச்செல்ல
மனமில்லா
திகைப்பிற்குள்
என்றென்றும்
எடுத்துச் சொல்ல
வழியறியா
ஆதங்கத்துடனும்
தோல்வி முகத்துடனும்
ஒரு
முழுமையான அடிமை - இங்கு
தலைவணங்கியபடி

சூர்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It