navathaniyangal

நம்மில் நீரிழிவு உள்ள சிலர் அரிசி, கோதுமைக்குப் பதிலாக ஒருவேளை உணவாக சிறு தானியங்களை எடுத்து வருகின்றனர்.

சிறு தானியங்கள் முதன்முதலில் கிழக்காசியாவில் ( இதுவும் பண்டைய சீனா தான்) சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்டது. சிறுதானியங்கள் குறித்து பொதுவான மக்கள் நம்பிக்கை என்னவென்றால், ‘சிறுதானியங்கள் மாவுச்சத்துக் குறைவானவை’ மற்றும் ‘அவற்றில் நமக்குத் தேவையான சத்துகள் நிரம்பியுள்ளன’ என்பதே ஆகும். இந்தக் கட்டுரை நமது நம்பிக்கை சரியானதா என்று மறுமுறை ஆய்வு செய்ய வைக்கும்.

நீரிழிவு கட்டுக்குள் வராது

முதலில் மாவுச்சத்து கண்டெண்ட் கேப்பை எனும் ராகியை (Finger Millet) பொடியாக மில்லில் அரைத்து நம் மக்கள் ரொட்டி சுட்டுச் சாப்பிடுகிறார்கள். அதில் நூறு கிராமிற்கு 71 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. திணை எனும் Foxtail millet ல் 100 கிராமிற்கு 57 கிராம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து இருக்கிறது.

கம்பு எனும் Pearl millet ல் 100 கிராமில் 67 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. வரகு எனும் Kodo millet ல் 100 கிராமில் 86 கிராம் மாவுச்சத்து உள்ளது. குதிரைவாலி எனும் Barnyard millet ல் 100 கிராமிற்கு 67 கிராம் இருக்கிறது. சாமை எனும் Little millet ல் 100 கிராமில் 65 கிராம் இருக்கிறது.

ஆகவே சிறுதானியங்களை மூன்று வேளை உணவாக கேப்பை ரொட்டி, குதிரைவாலிச்சோறு என்று சாப்பிட்டாலும் நீரிழிவு கட்டுக்குள் வருமா என்றால் வராது என்பதே பதில்.

சிறுதானியங்களில் வேறு என்ன பிரச்சனைகள் இருக்கின்றன?

சிறுதானியங்களில் நமது உடலின் தைராய்டு சுரப்பியை நிலைகுலையச் செய்யும் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. தைராய்டு சுரப்பியை வீங்கச் செய்து முன்கழுத்துக் கழலைகளை உருவாக்கவல்ல பொருட்களுக்கு Goitrogens என்று பெயர். இந்த Goitrogens சிறுதானியங்களில் அதிகம் இருக்கின்றன. இவை என்ன செய்கின்றன?

நமது உடலில் உள்ள செல்களை ஐயோடின் எனும் உப்புச்சத்தை உட்கொள்ள விடாமல் செய்கின்றன. நமக்கு தான் தெரியுமே... ஐயோடின் குறைபாட்டால், தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்பட்டு முன்கழுத்துக் கழலை நோய் (Goitre) வருகிறது.

அதனால தான நாங்க ஐயோடின் கலந்த உப்புகளை பயன்படுத்துறோம். எங்களுக்கு அந்த தைராய்டு பிரச்சனை வராது என்று மார்தட்டி கொள்ள வேண்டாம். ஐயோடின் சரியான அளவு எடுத்துக்கொண்டு, அதிகமாக சிறுதானியங்கள் சாப்பிட்டாலும், தைராய்டு பிரச்சனை வரலாம். எப்படி?

நாம் சரியான அளவுகளில் ஐயோடினை உணவில் சேர்த்து வந்தாலும், நம் உடல் அந்த ஐயோடினை கிரகித்துக்கொள்ளவில்லையெனில்அதே முன்கழுத்து கழலை நோய் வர வாய்ப்பு உள்ளது.

சிறுதானியங்களில் ஃபலேவனாய்ட்ஸ் (Flavanoids) எனும் உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு

  • Apigenin, 2. Luteolin, 3. Kaempferol, 4. Vitexin

இவை நமது தைராய்டு சுரப்பியில் ஐயோடின் சேர்வதைத் தடுக்கின்றன. (Inhibit uptake of iodine by thyroid gland ) அதனால் நமக்கு தைராய்டு குறைபாடு வர வாய்ப்பு அதிகம். கழலை வரவும் வாய்ப்புண்டு.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் சூடான் நாட்டில் டார்ஃபூர் என்ற மாவட்டத்தில் நடந்த ஒரு ஆய்வில் மூன்று இனமக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் சிறுதானியங்களை அதிக அளவில் உண்டு வருகின்றனர் என்று அறியப்பட்டது. அவர்களது தினசரி கலோரிகளில் பின்வரும் சதவிகிதங்களில் சிறுதானியங்கள் வழியாகச் சேர்த்து வருகின்றனர்.

1. காஸ்(kas) இனம் தங்களது உணவில் 73.6 % சிறுதானியம் உண்கின்றனர். 2. டவய்லா (tawaila) இனம் 66.7% வழி சிறுதானியங்கள் உண்கின்றனர். 3. ந்யாலா (Nyala) இனம் 37.1% சிறுதானியங்கள் உண்டனர். அவர்களிடம் தைராய்டு சுரப்பி வீக்க நோய் (Goitre) இருப்பது அளவிடப்பட்டது. அதில் அதிர்ச்சியூட்டும் விசயங்கள் தெரிந்தன.

உலகில் பிறருக்கு தைராய்டு நோய் வருவதை விட இந்த இனங்களுக்கு அதிகமாக வருகிறது என்றும் இந்த மூன்று இனங்களுக்கு பெண்குழந்தைகளில், காஸ் இனத்தில் 75% பேருக்கும், டவய்லா இனத்தில் 55% பேருக்கும், ந்யாலா இனத்தில் 13% பேருக்கும் முன்கழுத்துக் கழலை நோய் வந்தது கண்டறியப்பட்டது.

ஐயோடின் உடலில் சேராமல் போவதால், கர்ப்பிணி பெண்களுக்குக் கருக்கலைய வாய்ப்பு அதிகம்(Abortion). புத்திக் குறைபாடு (Poor Intellect), அதனால் படிப்பில் ஆர்வமின்மை முதலியன வரும். மேலும் இந்தச் சிறுதானியங்களில், ப்ரோடியேஸை தடுக்கும்(Protease Inhibitors) பொருட்களும் இருக்கின்றன. அவை பின்வருமாறு:

  • Trypsin 2.chymotrypsin 3.cysteine 4. Alpha amylase 5. Steroidal saponins

இந்த protease inhibitors நமது கணையத்தை பாதிக்கக்கூடியது. சபோனின்ஸ் நமது குடலின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இதெல்லாம் சரிதான். ஆனால் சிறுதானியங்களில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருக்கே? என்று கூறுபவர்களுக்காக...

சிறுதானியங்களில் இரும்பு, கால்சியம் நிறைய இருப்பது உண்மை தான். ஆனால் அந்தச் சத்துகளை நமது உடல் உள்வாங்கும் தன்மை மிகக் குறைவு. (Poor bio-availability) மேலும் சிறுதானியங்களில் Phytates @Phytic acid, Tannins (டீத்தூளில் இருக்கும் அதே பொருள் தான்) மிக அதிகம். இவை அந்தப் பொருட்களில் உள்ள சத்துக்கள் நமக்குக் கிடைக்காத வண்ணம் பார்த்துக்கொள்கின்றன.

பிறகு ஏன் இந்த தானியங்களில் இத்தனை சத்துகள் இருக்கின்றன? என்ற கேள்வி உங்களுக்கு எழுவது புரிகிறது. சிறுதானியங்களில் உள்ள இந்தச் சத்துகள் அனைத்தும் நமக்காகப் படைக்கப் பட்டவை அல்ல. கொரித்து உண்ணும் விலங்குகளான (Ruminants) அணில், எலி போன்றவற்றிற்காகப் படைக்கப்பட்டது. அவைகளின் வயிற்றில் Phytates ஐ செரிமானம் செய்யும் Phytase இருக்கின்றன. மனிதர்களுக்கு Phytase இல்லை.

இதையும் எலிகள் அளவுக்கு அதிகமாக உண்டால் அவற்றுக்கும் கழலை நோய் வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சிறுதானியங்களை அளவுக்கு அதிகமாக உண்ட ஆடுகளுக்கும் கழலை நோய் வருகிறது.

நமது முன்னேர்கள் சிறுதானியங்களைத் தானே உண்டனர்?

சிறுதானியங்கள் பஞ்சத்திலும் இரு போகம் விளையும். பசுமைப் புரட்சிக்கு முன்னால் அரிசி, கோதுமையெல்லாம் அனுதினம் உண்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆகவே ஒரு வேளை உணவாக இந்தத் தானியங்களை சேர்த்திருக்கலாம்.

இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு தைராய்டு குறைபாடு உள்ளது என்கிறது ஒரு செய்தி. இப்போது இந்தியா குறித்த தைராய்டு நோய் ஆராய்ச்சியில் , போதுமான அளவு ஐயோடினை மக்கள் உணவுகளில் (Even after taking sufficient iodine in their food, Number of people with goitre is in increasing trend) உட்கொண்டு வந்தாலும் கழலை நோய் வரும் சதவிகிதம் குறையவில்லை. ஆகவே, Goitrogens ன் (தைராய்டில் கட்டியை வரவைக்க கூடிய உணவுகள்) பங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டியுள்ளது என்று கூறுகின்றனர். ஆகவே, சிறுதானியங்களே என்னை மன்னித்துவிடுங்கள்.

Pin It