இந்தஆண்ஏப்ரல் மாதம் 22 ஆம் நாளன்று, உலகெங்கிலும் உள்ள 600 க்கும் மேற்பட்நகரங்களில், அந்தந்த நாட்டின் அரசுகள், அரசாங்கக் கொள்கைகளை வகுக்கும்போது அறிவியலை ஒரு முக்கியக்கூறாகக் கருதவேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் “GLOBAMARCH FOR SCIENCE” என்ற போராட்டத்தை நடத்தினர். அப்போது இந்தியா அதில் பங்கேற்கவில்லை.

ஆனால், நாட்டின்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கழகத்தின்(CSIR : Councifor Scientific and IndustriaResearch) ஆய்வகங்களுக்கும், பிரதான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் சரிவர நிதிகள் ஒதுக்காததாலும், கல்விவளாகங்களில் போலி-அறிவியல் கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருப்ப தாலும், மதநூல்களிலிருந்து முட்டாள்தனமான கருத்துக்களைத் தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்திக் கொண்டிருப்பதாலும், இந்திய விஞ்ஞானிகளும் ஆய்வுமாணவர்களும் இந்தியாவில் இப்போராட்டத்தை நடத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நாடுமுழுவதும் பல்வேறு அறிவியல் அமைப்புக்களுடன் சேர்ந்து,  “Breakthrough Society” என்ற அமைப்பு ஆகஸ்ட் 9 ம் தேதி இந்தியாவில்  'MARCH FOR SCIENCE' போராட்டத்தை நடத்தியது.

நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களான IISc, IIT,CSIR, IISER, TIFR மற்றும் பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து 20 க்கும் மேற்பட்நகரங்களில் இப்போராட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும் அணிவகுப்பில் கலந்துகொண்ட நரேந்திரதபோல்கர், யு.ஆர்.ராவ், யாஷ்பால் மற்றும் புஷ்பமித்திரா பார்கவா ஆகியோரின் பெருமையைப் போற்றும் வகையிலும், மூடநம்பிக்கைகள், பில்லி சூனியம் மற்றும் மதப்பிரச்சாரங்களுக்கு எதிராகவும் முழங்கினர். நாட்டின் முக்கிய விஞ்ஞானிகளான திப்பாங்கர்சாட்டர்ஜி, ரவிவர்மாகுமார் மற்றும் டி.வி.ராமச்சந்திரா ஆகியோரும் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

அவர்கள் பொதுமக்களிடையே அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புவதைக் கண்டித்தும், சுற்றுச்சூழல்சீர்கேடுகளைக் கண்டித்தும் பேசினர். மேலும் அறிவியல் தரவுகளையும், கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்அரசாங்கக் கொள்கைகளை உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆசியாவிலுள்ள மற்ற நாடுகளோஒப்பிடும்போது இந்தியாவில் மிகக்குறைவான நிதியே (0.8-0.9சதம்) அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், நாட்டின் ஆய்வுமுடிவுகள் மட்டும் மற்றவர்களைவிமுன்னணியில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, அரசாங்கம் 3 சதமாக அந்நிதி ஒதுக்கீட்அைதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

போராட்டத்தில்பங்கேற்றபல்வேறுவிஞ்ஞானிகளின்கருத்துகள்:

அமெரிக்காவில் நடந்த “March for Science” போராட்டம் ‘டொனால்ட்ட்ரம்ப்’-இன் ஆட்சி தட் பவெட்ப மாற்றத்திற்கான(Climate Change) விஞ்ஞானத்திற்கு எதிராக இருப்பதால் நடத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் இப்போராட்டம், போலிஅறிவியல் மற்றும் மாட்டின் சிறுநீருக்கு அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துத்தை எதிர்த்து நடத்தப்படுகிறது.

• அறிவியல்என்பது “இயற்கையான நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான தரவுகளைக் கொண்முறையான மற்றும் பகுத்தறிவு விளக்கங்களை உருவாக்குவதாகும்”. அவ்விளக்கங்கள் பல்வேறு அறிவியல் விதிகள் மற்றும் கோட்பாடுகளைக் (science laws and principles) கொண்ட நிறுவப்படும். அறிவியல் நிலையானதல்ல; அதன் விளக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் புதிய தகவல்களின் அடிப்படையில் எப்போதும் மாறக்கூடியவை.

ஆனால், தற்போது இந்தியாவில் நிலவும் அரசியல் சூழ்நிலையானது, மதகோட்பாடு களை உண்மையாக்க பல திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கோரி, மூடநம்பிக்கை களுக்கிடையில் அறிவியல் நிறுவனங்களைச் சிறைப்படுத்தியுள்ளது.

மக்களும் அரசியல்வாதிகளும் பலநேரங்களில் புராணங்களை அறிவியலோடு குழப்பிக் கொள்கின்றனர். இந்தியாவில் அறிவியல் மனப்பான்மைக்கு முட்டுக் கட்டைபோடுவது - இங்குள்ள கல்விமுறையாகும். கல்வியில் முறையான மாறுதல்களைக் கொண்டுவருவதன் மூலம், மக்களைக் கயிறுகளைக் கட்டிக் கொள்வதற்கு முன்பும், ஜோதிடம், நியூமராலஜி போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவதற்குமுன்பும் “ஏன்? எதற்கு?” என்ற கேள்விகளைக் கேட்கவைக்கலாம்.

அறிவியலும், அதன் ஆய்வுகளும் மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுத் தனித்து இயங்குகிறது. அறிவியலை அரசியல்படுத்தவேண்டும்.  அதுவேஅறிவியலைப் போற்றும் விதமாகும்.

மாட்டின் சிறுநீரைப் பயன்படுத்துவதன் நன்மைகளைக் கண்டுபிடிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மிகவும் ஆபத்தானதாகும். அது அறிவியலுக்கும் அடிமுட்டாள்தனத்திற்கும் இடையே உள்ள கோட்முைற்றிலும் அழிக்கும் அரசின் முன்னெடுப்பாகும்.

காசநோய்க்கான ஆராய்ச்சிநிதி குறைந்துவிட்டது; ஆனால் அதேநேரத்தில் மாட்டுக் கொட்டகைகளுக்கு (gow-shalas) நிதிஒதுக்கீஅதிகரித்துள்ளது.

இந்திய அறிவியல் காங்கிரஸ் (Indian Science Congress) என்ற நிகழ்வில் பழங்காலத்திலேயே இந்தியர்கள் ரதங்களைக் கொண்விண்வெளியில் பறந்ததாகவும், விநாயகரை எடுத்துக்காட்டாகக் கொண்இந்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரியில் நிபுணத்துவம் பெற்றிருந்ததாகவும் கூறியது அபத்தமாக இருந்தது.

2016 ஆம் ஆண்ஜூன் மாதம், புனேயில்உள்ள “Indian Institute of TropicaMeteorology”  என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தியாவில் காற்று மாசுபாடுதல் காரணமாக இறப்பவர்கள் பற்றிய ஒரு ஆய்வறிக்கையை, ஜியோ ஃபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் (GeophysicaResearch Letters) என்ற உலகப் பெருமை வாய்ந்த ஆய்விதழில் வெளியிட்டனர். ஆனால் அந்த ஆய்வை, “இந்தியாவின் பெருமையைத் தாக்கும் முயற்சி” என்றுகூறி இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்தது. இதற்கு முரணாக, மோடி அவர்கள் டெல்லியில் நிலவும் காற்று மாசுபடும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

எவ்வித அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையும் இல்லாத ஆயுர்வேதா, யோகா மற்றும் ஹோமியோபதி போன்ற உள்நாட்ஆராய்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது வேதனை அளிக்கிறது.

உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான், அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்றபிரிவில்,  ஒரு கடமையாக “அறிவியல் மனப்பான்மை, மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்க்கவேண்டும் ( Article 51A, Sub-clause (h), on ‘FundamentaDuties’ :- "It shalbe the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இப்படிப்பட்ஒருநாட்டில் சமீபகாலமாக நிலவும் அனைத்தும் மிகவும் ஆபத்தானது. விஞ்ஞானம் உலகளாவியது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியா மற்ற நாடுகளுக்கு ஒ ருநகைச்சுவைப் பொருளாகிவிடக்கூடாது.

“வேதங்களிலேயே அனைத்து அறிவியல் கூறுகளும் உள்ளன” என்றுகூறி முட்டாள்தனமான போலி அறிவியல் கூற்றுகளை நாட்மக்களிடையே பரப்பி, நவீனஅறிவியல் ஆராய்ச்சிகளைப் புறந்தள்ளும் பா.ஜ.க. வைச் சேர்ந்த அனைவரையும் முகத்தில் அறைந்தாற்போல் இப்போராட்டம் நாடெங்கிலும் நடந்துள்ளது.

நன்றி : www.outlookindia.com, www.scroll.in , www.thewire.in

Pin It