“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வேபயணச்சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக்காப்பீடு மற்றும் பொதுத்துறை வங்கிகளில்பணியாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர்கொள்கிறார்கள்.

டெல்லி அரசுகளின் கயமைத்தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில்இயங்கும்மத்தியஅரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புரிமை தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.

இது சேவைத்துறைகளில் மட்டுமல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற்துறைகளான (Factories & Enterprises) என்.எல்.சி (NLC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற் சாலை, இராணுவ உடை தயாரிப்பகம், (Defence Factories) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகிய தொழிற் சாலைகளில் இந்த நிலைதான்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission)

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டப்பூர்வ மத்திய அரசு நிறுவனமாகும் (Statutory Body). இவ் வாணையம் 145 க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களைப் பணியமர்த்தும் பணிகளை மேற்கொள்கிறது. இந்திய அளவில் 7 மண்டலங்கள், 2 துணை மண்டலங்களுடன் இவ்வாணையம் செயல்பட்டு வருகிறது.

2006 வரை மண்டல அளவிலேயே இப்பணியமர்த்தும் நடவடிக்கைகளை இவ் வாணையம் மேற்கொண்டு வந்தது. இதனால் மத்திய அரசின் துறைகளில் எல்லா மாநில மக்களுக்கும் அந்தந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் கிடைத்து வந்த்து.

மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த இத் தேர்வுகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஒட்டி (Radhey Shyaam Singh & Ors Vs Union of India) 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு அகில இந்திய அளவில் மாற்றப்பட்டது. உச்சநீதிமன்றம்அகில இந்திய அளவில் இத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கூறியிருந்தாலும் தேவையான பணியிடங்களையாவது மண்டல அளவில் நியமிக்க மத்திய அரசின் பணியாளர் நியமன அமைச்சகத்திற்கு ஒரு பரிந்துரையை செய்தது.

“If the Government is keen to make zone-wise selection after allocating some posts for each zone it may make such scheme or rules or adopt such process of selection which may not clash with the provisions contained in Article 14 and 16 of the Constitution of India having regard to the guidelines laid down by this Court from time to time in various pronouncements.”

jobs chennai news 600குறைந்த அளவில் இப்பரிந்துரையைக் கூட கணக்கில் கொள்ளாத இந்திய அரசு உடனடியாக தேர்வுகளை அகில இந்திய அளவில் நடத்த தொடங்கியது. இவ்வாறு அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்படுவதால் மத்திய அரசு நிறுவனங் களில் தமிழர்கள் பணியமர்த்தப்படுவது முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தமிழகத்தில் அதிக அளவில் பணிஅமர்த்தப்படுகின்றனர். இதைக் கண்ணுற உணவு இடைவேளையில் சென்னையில் உள்ள வருமான வரி உணவகத்திற்கு வந்தால் நீங்கள் இருப்பது தமிழ்நாடாஅல்லது வடநாடா என்ற அளவிற்கு பீகார், உ.பியை சேர்ந்தவர்கள் நிரம்பி இருப்பார்கள். (புள்ளி விவரம் காண்க). இதற்கு அம்மாநிலத்தைசேர்ந்தவர்கள் தமிழர்களைவிட அதிக மதிப்பெண்களை நுழைவுத்தேர்வுகளில் பெறுகிறார்கள் என ஒரு பொய்யான காரணம் கூறப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அம்மாநிலங்களில் நிலவும் அளவுக்கதிகமான வேலை வாய்ப்பின்மையை பயன்படுத்திக் கொண்டு லக்னோ, பாட்னா மற்றும் சிறு நகரங்களில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆணையத்தில் உள்ள அதிகாரிகளையும், ஊழியர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு குறுக்கு வழியில் மோசடிகள் செய்யத்தொடங்கின.

நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வுக்கு முன்னரே வெளியிட்டுவிடுவது, தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு கால அளவை கூடுதாக அளிப்பது, பணி நியமனத்திற்கு பணம் அளித்த வர்களை ஒரு குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே தேர்வெழுதவைத்து அவர்களுக்கு வினாக்களின் விடையை அளித்து தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது என பல முறைகேடுகளை இப்பயிற்சி நிறுவனங்கள் அரங்கேற்றியுள்ளன. இதற்கு சாட்சியாக ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய பலர், ஒரே வீதியை சேர்ந்த பலர் பீகரில் இருந்தும் உ.பி யில் இருந்தும் முறைகேடாக தேர்ந்தடுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகளில் இன்றும் பணியாற்றி வருகின்றனர் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது.

இதில் உச்சகட்ட மோசடி 2013ஆம் ஆண்டு நடைபெற்று வெளியுலகத்திற்கு தெரியவந்தது. கணிசமான மாதச்சம்பளம் உள்ள Inspector of Income tax, Customs Preventive Officer, Central Excise Inspector, Customs Appraiser, AGs office Auditor மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கு CGLE- 2013 (Common Graduate Level Exam-2013)) என்ற பெயரில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் பீகாரில் உள்ள 7 மையங்களில் வினாத் தாள்கள் வெளியானதால் ஒரு வருடத்திற்கு முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இத்தேர்வெழுதிய பலர் நீதிமன்றத்தை அணுகியதால் முறைகேடுகளை விசாரித்த நீதிமன்றம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டு ஏப்ரல் 2014ல் இத்தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டன என்பதே எவ்வளவு முறைகேடுகள் இதற்கு முன்னர் வெளிச்சத்துக்கு வராமல் போயிருக்கும்என்பதற்குசாட்சி. இத்தேர்விலும் முறைகேடுகள் நடந்து 2015ஆம் ஆண்டில் வருமானவரித்துறையில் மோசடி செய்து பணியில் சேர்ந்த மூவர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Source : incometaxindia.go.in

தபால் துறையில் தபால் உதவியாளர் தேர்வுகளில் தமிழர்களுக்கு எதிரான மோசடியான மாற்றம்

தபால் துறையில் அடிப்படை பணிகளை செய்யும் தபால்உதவியாளர்பணியிடங்களுக்கு (Postal Assistant) 2014 வரை தேர்வுகள் அந்தந்த மாநில தபால்துறை (Postal Circle) முறையாக, சிறப்பாக நடத்தி வந்தது. அப்போது இத் தேர்வுகளில் அப்ஜெக்டிவ் (objective) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) மூலமாக இரண்டு கட்டநிலைகளில் பணிநியமனச் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதனால்முழுமுதலாக அந்தந்த மாநில மக்களுக்கான வேலை வாய்ப்புகள் தபால் துறையில் கிடைத்து வந்தது.

2015 முதல் மத்திய அரசுப் பணியாளர் தேர் வாணையம் (Staff Selection Commission) இப்பணி நியமனத்தையும்கையில்எடுத்துக்கொண்டுஅகில இந்திய அளவிலான தேர்வுகளாக மாற்றியது. இத்தேர்வுகளில் இந்தி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. எழுத்துமுறை (Descriptive) வினாத்தாள்கள் இந்தியில் நுழைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அப்ஜெக்டிவ் (objective) வினாத்தாள்களும் ஆங்கிலத்துடன்இந்தியிலும் இருப்பதால், இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள் எழுத்து முறை மிகஎளிதாகவும், Objectiove வினாக்களை விரைவில் புரிந்து கொண்டும் விடையளிப்பது மிகவும் சுலபமாகவும் இருக்கிறது.

மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே விடையளிக்கும் நிர்ப்பந்தகளை இந்திய அரசு ஏற்படுத்தித் தந்து இந்தி பேசும் மக்களுக்கு சாதகமாக நடந்துகொள்கிறது என்பதை சுட்டிக்காட்டவேண்டும். மிக உயரிய முதல் நிலை IAS, IPS பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தும் UPSC க்கூட தேர்வுகளை தமிழில் நடத்துகிறது ஆனால்மக்களிடையே நேரடியாக தொடர்பு கொண்டு களத்தில் பணியாற்றும் இப்பணியிடங்களுக்கு நாம் பலமுறை வலியுறுத்தியும் இந்திய அரசானது தமிழில் தேர்வுகளை நடத்த மறுக்கிறது. இது தபால்துறை பணியிடங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மத்திய அரசுப் பணிகளான LDC, Data Entry Operator பணிகளுக்குவிரிவுசெய்யப்பட்டுவடவர்களுக்கு சாதகமாக இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டு, தமிழர்கள் இப்பணியிடங்களுக்கு செல்ல இயலா நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தேர்விலும் தமிழர்களுக்கு இடமில்லை

இதே நிலைதான் அதிகாரிகள் பணி நியமனங் களிலும்.மத்தியஅரசுஅலுவலகங்கள்,தொழிற் சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீட்டுநிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றிற்கு அதிகாரிகள் அளவிலான பணிநியமங் களுக்கும் மேற்கண்ட முறையிலேயே எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கூடுதலாக நேர்முகத் தேர்வுகள் (Interview) டெல்லியிலும், மும்பையிலும் மையமிட்டு நடத்தப்பட்டு, மதிப்பெண் அளிப்பவர்கள்பெரும்பாலும்வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்தி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தமிழகத்தை சேர்ந்தவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். லட்சங்களில் மாத ஊதியம் பெறும், இவ்வாறு தேர்வு செய்யப்படும்அதிகாரிகளே எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களுக்கு தலைமைப் பொறுப்புகளுக்கு வருகிறார்கள், இவ்வாறு தலைமைப் பொறுப்பு களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களை வரவிடாமல் தடுப்பதற்கான டெல்லியின் சூழ்ச்சியினால் இப்பணியிடங்களுக்கு தமிழர்கள் ஒருவர்கூட நியமிக்கப்படுவதில்லை.

newspaper 600ஸ்டேட் வங்கிப் பணியாளர் தேர்வில் தமிழர்களுக்கு எதிராக நடந்த நூதன மோசடி

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு பணியாளர் தேர்வுகளை IBPS எனப்படும் Institute of Banking Personnel Selection என்ற அரசு சார் நிறுவனம் நடத்திவருகிறது. அந்த நிறுவனம் அகில இந்திய அளவில் தேர்வுகளை நடத்தினாலும் ஒவ்வொரு மாநிலத்தில் பணி யமர்த்தப்படும்வங்கிப்பணியாளர்கள்அந்தந்த மாநில மொழி தெரிந்தவராக இருத்தல் வேண்டும் என்ற அறிவிப்பினை அண்மையில் அறிவிப்பாணை 2016ல் வெளியிட்டுள்ளது. இதனாலேயே நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பணி நியமனங்கள் கிடைத்து வருகின்றன.
“Proficiency in the Official Language of the State/UT (candidates should know how to read/ write and speak the Official Language of the State/UT) for which vacancies a candidate wishes to apply is preferable” (page-3, III. Educational Qualification column, IBPS - 2016 notification dated 12.08.2016 )

ஆனால் இதில் விலக்காக ஸ்டேட் வங்கிகள் மட்டும் தனியே தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம். இதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கையில் மாநில மொழி களுக்கு முக்கியத்துவம் அளித்து கீழ்கண்டவாறு அறிவிப்பு வந்தது.

“knowledge of local language will be an added qualification”. Source: (page 2, educational qualification column, note(d) ,2014 SBI notification dated 22.05.2014 )

ஆனால் 2016ஆம் ஆண்டு இதே அறிவுப்பு ஸ்டேட் வங்கியால் வஞ்சகமாக, மோசடியாக கீழ்கண்டுள்ளவாறு மாற்றப்பட்டுள்ளது.

“Candidate should be able to write and speak english”. Source: (page 4, Eligibility Criteria, (A) Essential Academic Qualification, note (c) -2016 notification dated 05.04.2016)

இதில் வட்டார அல்லது மாநில மொழி என்ற வார்த்தை வேண்டும் என்றே நீக்கப் பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதுவும் 05.04.2016 நாளிட்ட முதல் அறிவிப்பில் தமிழ் மட்டும் இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக 20.04.2016ல் ஒரு திருத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தமிழ் மொழியுடன் ஆங்கிலமும் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் தெரியாவிட்டாலும் ஆங்கிலமும் தெரிந் திருந்தால் போதும் என்பதே இதில் உள்ள சூழ்ச்சியாகும். கட்டாயமாக ஒருவர் பட்டப் படிப்பு படித்து இருந்தால் ஆங்கிலம் ஒரு மொழி யாக படிக்காமல் பட்டம் பெற இயலாது, ஆகவே தமிழர்களுக்கான முதலுரிமை வேண்டு மென்றே பறிக்கப்பட்டுள்ளது. இதிலும் நாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய செய்தி என்னவென்றால் ஜம்மு காஷ்மீர், சண்டிகர் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே இத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதாகும்.

இதில் சுட்டிக்காட்டப்படவேண்டிய மற்றொரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா விலேயே தமிழகத்தில்தான் அதிகமான அளவில் 1420 பணியிடங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு ஒரு பணியிடமும் இல்லை சண்டிகருக்கு 185 பணியிடங்கள் மட்டுமே. தற்போதுஇப்பணிகள் பெரும்பாலும் தமிழரல்லாதவர்களாலேயேநிரப்பப்பட்டுள்ளது என்பது இவ்வங்கி தமிழர் களுக்கான வேலை வாய்ப்பு உரிமையை எவ்வளவு மோசடித்தனமாக பறித்துள்ளது என்பது புலப்படும். இவ்வாறு இந்திபேசும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில்சிறுநகரங்களிலும்,மாவட்டதலை நகரங்களிலும் பணியமர்த் தப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இதனால்தமிழகத்தில் இயங்கும்மத்தியஅரசின் சேவைகளைப் பெறவேண்டுமானால் அங்கு பணியாற்றும் இந்தி மட்டுமே தெரிந்த வேற்று மாநில பணி யாளர்களிடம் இந்தி தெரிந்தால் மட்டுமே அவ்வலகங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது என்பது கண்கூடு.

இவ்வாறு இந்தி பேசும் பணியாளர்களை வைத்துக்கொண்டு நிர்வாகத்தை நடத்துவதிலும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் பல சிக்கல்களைச் சந்திக்கின்றன. வேற்று மாநிலத்தில் இருந்து பணியாற்ற வரும் ஊழியர்கள் மீண்டும் தமது மாநிலத்திற்கே செல்ல பணியிட மாற்ற விண்ணப்பம் செய்து, அப்பணியிட மாற்றத்திலேயே குறியாக இருப்பதால் இம்மாநிலத்தில் உள்ள பணிகளில் சுணக்கம் காட்டுகின்றனர். பணியிட மாற்றம் கிடைத்த பின்பு காலியாகும் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதும் இல்லை அவ்வாறு நிரப்பப்பட்டாலும் அதிலும் இந்தி பேசுபவர் களே மீண்டும் வருகிறார்கள். இவற்றைக் களையக்கோரி சம்பந்தப்பட்ட மத்திய அரசின் தலைமை நிர்வாகிகளும், தொழிற்சங்கங்களும் பலமுறைஇந்தியஅரசிற்குகோரிக்கைவைத்தும் இவை கண்டுகொள்ளப்படவே இல்லை.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் (IGCAR) நிரப்பப்படும் வேலை வாய்ப்புகள் தகிடுதத்தங்கள் செய்து வேற்று மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் மோசடி களையும் குறிப்பிட வேண்டும்.

2015 ஆம் ஆண்டு மேற்படி நிறுவனத்தினால் ஆய்வுக்கூட உதவியாளர் (Laboratory Assistant) பணியிடத்திற்கு வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கல்வித்தகுதி கீழ்கண்டவாறு கேட்கப் பட்டுள்ளது:

i) Minimum 60% marks (in aggregate) in SSC with Science and Maths.

ii) Trade Certificate of not less than1 year duration in Laboratory Assistant (Chemical Laboratory) is

mandatory for SSC.

OR

Minimum 60% marks (in aggregate) in HSC (Science stream) with Physics, Chemistry and Mathematics as

subjects

மேற்கண்ட அறிவிக்கையாவது ஒரே ஒரு பதவிக்கானது, ஆனால் இதுவே இவ்வாண்டு அதாவது 2016 ஆண்டு 34 பணியிடங்களுக்கான அறிவிக்கையாக வரும்போதுதான் சூழ்ச்சியாக யாரும் அறியாவண்ணம் கல்வித் தகுதியில் கீழ் கண்டுள்ளவாறு தகிடுதத்தங்கள் செய்து வேற்று மாநிலத்தவர்க்கு தாரைவார்த்து இருக்கிறார்கள்.

i) Minimum 60% marks (in aggregate) in HSC (Physics, Chemistry & Maths) or Minimum 60% marks (in aggregate)

in SSC (Science & Maths).

ii) ITI Certificate of not less than 2 year duration in Laboratory Assistant (Chemical Plant).

OR

ITI in the relevant trade of one year duration plus one year relevant experience after completion of the course.

Source: (page - 1 & 2, IGCAR notification 1/2016)

இதில் கவனிக்கப்படவேண்டிய செய்தி என்ன வென்றால் 2015ஆம் ஆண்டு +2 தேர்வில் 60% தேர்ச்சிபெற்றால் போதும் என்று உள்ளது.

2016ல் இது மாற்றி அமைக்கப்பட்டு கூடுதலாக இரண்டு ஆண்டு வேதியல் தொழிற்பயிற்சி சான்றிதழ் படிப்பு கட்டாய தேவை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் முக்கியமாக இந்த வேதியல் தொழிற்பயிற்சி சான்றிதழ் படிப்பானது தமிழகத்தில் உள்ள எந்த தொழிற்பயிற்சி / கல்வி நிலையத்திலும் கற்பிக்கப்படவில்லை ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் மட்டுமே உள்ளது.

அது மட்டுமல்லாமல் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இந்தபணியிடத்திற்கு +2கல்வியே போதுமானதாகும் என்று கூறுகிறார்கள், ஏனெனில் இந்த நிறுவனமே இப்பணிக்கான பயிற்சியினை சம்பளத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு அளித்து அவர்களை தகுதி உள்ளவர்களாக பயிற்றுவிக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இப்பணியிடங்கள் கிடைக்கக் கூடாதுஎன்பதே உயர்வகுப்பினரும்,வேற்றுமாநிலஅதிகாரிகளும் இடம்பெற்று இருக்கும் இந்த அணுமின் நிலையத்தின் சதியாகும். தமிழ்நாட்டில் தமிழர்கள் வேலைவாய்ப்பு இப்படி பரிபோய்க் கொண்டிருக்கும் நிலை தொடரக் கூடாது. இதன்படி 2016ல் 34 பணியிடங்களுக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்த 32 நபர்கள் விண்ணப்பித்து அனைவருக்கும் பணி அளிக்கப்பட்டு விட்டது என்பது இம்மோசடியின் உச்சகட்டமாகும்.

தமிழ்நாடு வருமானவரித்துறையில் மத்திய அரசுபணியாளர் தேர்வாணையத்தின் பணி நியமனங்கள்

table 1 500

table2 500

table3 500

Pin It