திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்™ கடந்த ஐந்து ஆண்டுகளில்™ நிலநடுக்கங்களும், பூமியில் இருந்து உருகிய பாறைக்‚குழம்புகள்œவெடித்து மேலெழும்பும் நிகழ்வுகளும்‹ பல முறை நிகழ்ந்துள்ளன. 2001 நவம்பர்˜ 24 ஆம்‹ தேதியன்று தென்காசிக்கும் திருநெல்வேலிக்கும்‹ இடையில்™ அமைந்துள்ள சுரண்டையை அடுத்துள்ள நிலம்‹ ஒன்றில் உருகிய பாறைக்குழம்பு வெடித்து மேலெழும்பியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்குப்Š பின்னர், கூடங்குளத்தில் அமையவிருக்கும்‹ அணுஉலைகள் இந்த நிலவியல்™சூழ்நிலைகளைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலவியல் சூழ்நிலைகளையெல்லாம் தாங்கும்‹ அளவிற்கு இந்த உலைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்œ நம் அணுசக்தி விஞ்ஞானிகள்œ.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியைச் சேர்ந்த டாக்டர்˜. மணிமாறன் போன்ற நிலவியலாளர்கள்œ இந்த அணுஉலையின் பூகம்பவியல் பாதுகாப்புத்ˆதிறனை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்‹என்று கருத்துˆ தெரிவித்திருக்கிறார்கள். இப்புத்தகம்‹மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளையும் ஆய்வுக்கு எடுத்துக் ‚கொள்கிறது. இவற்றைப்Š புரிந்து கொள்வதற்காக இவை இரண்டுடனும்‹தொடர்புடைய முக்கிய ஆய்வுக்‚கட்டுரைகள் அனைத்தையும்‹ ஆராய்ந்து பார்க்கிறது.

புத்தகத்தினைப் படிக்க இங்கு அழுத்தவும்.

Pin It