அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்த் தேச இறையாண்மை அமைப்பின் தலைவரும், தொழிலாளி 8 இதழின் ஆசிரியருமாகிய அன்புத் தோழர் திருமொழி ( 57 ) அவர்கள் 1980 - களிலிருந்து 1992 வரையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மா.லெ) தமிழ்நாடு அமைப்புக் கமிட்டியிலும், 1992 முதல் 2001 வரையில் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
பிறகு தொழிலாளி 8 இதழைத் தொடங்கி, 8 மணி நேர வேலைக்கான தொழிலாளர் இயக்கத்தை அமைத்துச் செயல்பட்டு வந்தார். தொடர்ந்து 2019 சூலை 18 ஆம் நாளில் தமிழ்த் தேச இறையாண்மை என்ற அமைப்பைக் கோவையில் உருவாக்கித் தீவிரமாக இயங்கி வந்தார்.
தமிழ் - தமிழர் - தமிழ்நாடு ஆகியவற்றின் மேம்பாட்டினை இலக்காக வரித்துக் கொண்டு, உழைக்கும் மக்கள் பணியே தன் வாழ்க்கை எனத் தீர்மானித்து மார்க்சிய- லெனினிய வழியில் தமிழ்த் தேசியத்தைக் கட்டியமைக்கக் களமாடி வந்தார்.
இத்தகைய தோழர் 28.07.2019 ஞாயிறு காலை 5 மணிக்குக் கோவையில் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு நினைவிழந்தார். அவர் தற்பொழுது கோயமுத்தூர் கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால் இவ்விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு மிகக் கடுமையாக இருப்பதால், மருத்துவத்திற்குப் பெரும் தொகை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தொண்டறமே தலையாயது என்பதால், தனக்காகவோ, தன் குடும்பத்தினருக்காகவோ தோழர் இதுவரை பொருள் ஏதும் தேடிக் கொள்ளவில்லை. எனவே இப்படிப்பட்ட தோழரை இக்கட்டான இத்தருணத்தில் தமிழ்ச் சமூகம் கைவிடக் கூடாது.
நமது தோழமையையும், கரிசனத்தையும் காட்ட அரியதோர் வாய்ப்பு இது. எனவே மக்கள் பணி ஆற்றும் நமது தோழரைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும். தோழரின் மருத்துவச் செலவுக்காக அதிக பட்சத் தொகையை அவரது மகள் தோழர் தென்மொழி அவர்களது வங்கிக் கணக்கில் தாமதிக்காமல் உடன் அனுப்பி உதவுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
வங்கிக் கணக்கு விவரம் -
T. THENMOZHI,
HDFC Bank,
Sundarapuram ( Coimbatore )
Savings Bank Account Number -
50 100 244 519 850.
IFSC HDFC 000 36 43.
இப்படிக்கு,
கு.இராமகிருஷ்ணன்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
கொளத்தூர் மணி,
திராவிடர் விடுதலைக் கழகம்.
தி.வேல்முருகன்,
தமிழக வாழ்வுரிைமைக் கட்சி.
பேராசிரியர் ஜவாகிருல்லா,
மனிதநேய மக்கள் கட்சி .
கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி
எஸ் டி பி ஐ கட்சி .
தோழர் தியாகு,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
அரங்க குணசேகரன்,
தமிழக மக்கள் புரட்சிக் கழகம்.
திருமுருகன் காந்தி,
மே 17 இயக்கம்.
பொழிலன்,
தமிழக மக்கள் முன்னணி .
குடந்தை அரசன்,
விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி.
ப.பா. மோகன்,
மூத்த வழக்கறிஞர்.
கண. குறிஞ்சி,
மக்கள் சிவில் உரிமைக் கழகம்
( பியூசிஎல் )
சதீஸ்குமார்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி.
வாலாசா வல்லவன்,
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி.
செல்வி,
மனிதி அமைப்பு.
செந்தில்,
இளந்தமிழகம்.
டைசன்,
தமிழர் விடியல் கட்சி.
பாஸ்கர்,
பொதுமையர் பரப்புரை மன்றம்.
வழக்குரைஞர் பாவேந்தன்,
தமிழ்த்தேச நடுவம்.
இரா. மருதுபாண்டியன்,
சோசலிச மையம்.