27-11-2016, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.


பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.


சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது: மதுபானக்கடை


சிறப்பு விருந்தினர்கள்:


பாலாஜி சக்திவேல்

ஜனநாதன்

&

கமலக்கண்ணன்

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ இயக்கம், தன்னுடைய ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி இந்த ஆண்டு முதல் சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருது வழங்கவும் முடிவு செய்துள்ளோம். அதன்படி முதல்விருதை மதுபானக்கடை திரைப்படம் பெறுகிறது. இதனை அப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் பெற்றுக்கொள்கிறார். இதற்கான விழாவும், மதுபானக்கடை திரைப்படம் திரையிடும் நிகழ்வும் நவம்பர் 27, ஞாயிறு நடைபெற உள்ளது. திரையிடல் முடிந்தபிறகு விருது வழங்கும் விழாவும், கலந்துரையாடலும் நடைபெறும்.

அனைவரும் வருக...அனுமதி இலவசம்...

-----------------------------------------------------------------------------------------------------------

ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ...

நண்பர்களே இன்று ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இன்றுவரை

* 1988 நிகழ்ச்சிகள்
* 3002 குறும்படங்கள் திரையிடல்
* 200 ஆவணப்படங்கள் திரையிடல்
* 295 உலகப் படங்கள் திரையிடல்
* 268 இந்தியாவின் ஆக சிறந்த திரைப்படங்கள் திரையிடல்
* 55000 உறுப்பினர்கள்
* லட்சக்கணக்கான பார்வையாளர்கள் (தமிழ் ஸ்டுடியோ & பேசாமொழி இணையத்தளத்திற்கு)
* 420 வெள்ளித்திரை படைப்பாளிகளுடன் கலந்துரையாடல்
* 24 மாவட்டங்களில் குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல்
* 14 பிரம்மாண்டமான பயிற்சிப் பட்டறைகள் (புகைப்பட பயிற்சி, சிறுகதை பயிற்சி, இயக்குனர் மிஷ்கின் பயிற்சிப் பட்டறை உட்பட)
* இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
* தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டம்
* தமிழில் மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் (www.pesaamoli.com)
* சினிமா தொடர்பான முக்கியமான நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்து கொண்டிருப்பது
* நூறு தமிழ்ப்படங்களை திரையிடுவது
* நூறு தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுடன் கலந்துரையாடல்
------------------------------------------------
தமிழ்நாட்டில் முதல் முறையாக குழந்தைகளுக்கான உலகத் திரைப்பட விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடத்தியது
------------------------------------------------
இந்தியாவில் வேறெங்கும் சாத்தியப்படாத திரைப்பட பயிற்சி இயக்கம் படிமை, இப்படியான ஒரு பயிற்சி இயக்கம் இரானில் மட்டுமே உள்ளது
------------------------------------------------
புழக்கத்தில் இருந்து அறவே அழிந்துப் போன கதை சொல்லல் முறையை மீண்டும் இணையத்தில் கொண்டுவந்தது...
------------------------------------------------
குறும்படங்களுக்கான சந்தை மற்றும் போட்டிகளை அதிகளவில் உருவாக்கியதில் பங்கு, குறும்படங்களை தொடர்ச்சியாக திரையிட்டும் விவாதித்தும் அதற்கான தளத்தை உருவாக்கியது
------------------------------------------------
2010 ஆம் முதல் சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக உருவாக்கிய லெனின் விருது
------------------------------------------------
2014 ஆம் ஆண்டு முதல் குறும்படங்களுக்கான பாலு மகேந்திரா விருது
------------------------------------------------
2016 ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தமிழ் ஸ்டுடியோ விருது
------------------------------------------------
பிரான்சில் மட்டுமே நடைபெற்று வந்த திரைப்படங்களைப் பார்க்கும் ரசனை முறையை பௌர்ணமி இரவாக தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது
------------------------------------------------
ரசனை மாற்றத்திற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்டால் தலைப்பில், தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில்,தினசரி திரைப்படங்கள் திரையிடல் நடத்துவது
------------------------------------------------
அரசு தணிக்கை மற்றும் கும்பல் தணிக்கையால் திரையரங்கிற்கு வர முடியாத படங்களை திரையிடுவதற்கான வெளியை உருவாக்கியது.
------------------------------------------------
தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒவ்வொரு குறிப்பிட்ட தலைப்பின் (theme) கீழ் வெளிவரும் மாத அச்சிதழ் படச்சுருள். இதுவரை தணிக்கை, தலித் சினிமா, ஆவணப்படுத்துதல், தமிழ் சினிமாவில் பெண்கள் ஆகிய கருப்பொருளில் வெளிவந்துள்ளன.
------------------------------------------------
இந்தியாவில் இரண்டாவது, தமிழ்நாட்டின் முதல் சினிமாவிற்கான பிரத்யேக புத்தக அங்காடி பியூர் சினிமா புத்தக அங்காடியை உருவாக்கியது.

Pin It