எனது புதிய நூல்கள் ஆடாத நடனம் (சிறுகதைத் தொகுதி), நட்பாட்டம் (கவிதைத் தொகுதி) ஆகியவற்றின் வெளியீட்டு விழா மதுரை நார்த் கேட் ஹோட்டல் கருத்தரங்கக் கூடத்தில் வரும் 31 ஆகஸ்ட் 2014 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதைத் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விரண்டும் பரிதி பதிப்பகத்தின் வெளியீடுகள். இவ்விழாவில் உயிர்மை ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன், உயிர் எழுத்து ஆசிரியரும் கவிஞருமாகிய சுதீர்செந்தில் ஆகியோர் புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். நூல்களை ஆனந்த விகடன் இதழின் தலைமை உதவி ஆசிரியர் கதிர்பாரதி மற்றும் கவிஞர் குமரகுருபரன் ஆகியோர் பெற்றுக்கொள்ள உள்ளனர்.

இவ்விழாவில் 'அசத்தப்போவது யாரு' கிறிஸ்டோபர் ஞானராஜ், கவிஞர் மதுமிதாராஜா, அருணாச்சலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருப்பது ஜெயவல்லி.

வரவேற்புரை நிகழ்த்துவது அமர்நாத் மற்றும் நன்றியுரை நிகழ்த்துவது இளம்பரிதி

எழுத்துக்காரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள். நீங்களும் கலந்து கொண்டு கரங்குலுக்கி மனம் உதிர்க்கும் சொற்கள் கொண்டு வாழ்த்தினால் அதை விட இன்பம் வேறேது?

உங்களை அந்த விழாவில் எதிர்பார்க்கிறேன் என்பது சம்பிரதாயச் சொல்லாடல் அல்ல. உங்கள் வருகை அதனை மெய்ப்பிக்கும்.

- ஆத்மார்த்தி, 9894470008

Pin It