poonguzhali 600

நமது பண்பாட்டில் உறவுகளை நிலைநிறுத்துவதற்கும், புதிய உறவுகளை உருவாக்குவதற்கும் திருமணம் ஒரு முக்கிய களமாக இருக்கிறது. இந்த திருமணமுறையானது உறவுகளை மட்டுமல்ல, ஜாதியையும் நிலைநிறுத்திவருகிறது. பலநூற்றாண்டுகளாக ஜாதிக்குள் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் மண உறவுகள், சமுதாயத்தில் உடல்ஊனம், மன ஊனம், மருத்துவ ஊனங்களை அதிகமாக்கிவருகிறது.

தொடர்ச்சியாக ஜாதிக்குள் நடைபெற்றுவரும் திருமண முறையால், உருவாகும் அடுத்தத் தலைமுறை, உளவியல், உடலியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவ, மரபணு மற்றும் மானுடவியல் அறிஞர்களின் மூலம் விளக்குகிறது இந்த ஆவணப்படம்.

இப்படத்தை மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பரவலாக எடுத்துச் செல்ல உங்கள் ஆலோசனைகளை வழங்க அவசியம் வாருங்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - கருந்திணை & பனுவல்

நாள் - 09-05-2014

நேரம் - மாலை 6.30 - 8.30

இடம் - பனுவல் நூல் நிலையம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை. (திருவான்மியூர் சந்திப்பிலிருந்து திருவான்மியூர் பேருந்து நிலையம் செல்லும் வழியில் அந்த சாலையிலேயே வலது புறத்தில் உள்ளது பனுவல் நூல் நிலையம்)

தொடர்புக்கு - 9444209355, 9787313222

Pin It