1. மக்களவையை தேசிய இனங்களின் அவையாக மாற்றி அதில் அனைத்து தேசிய இனங்களுக்கும் சமபிரதிநிதித்துவம் வழங்க தமிழர் மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

2. தமிழ், தமிழர், தமிழகம் குறித்த இந்தியாவின் உள்ளுறவு, அயலுறவு கொள்கையை தமிழகமே தீர்மானிக்கும் அதிகாரம் தமிழகத்திற்கு வழங்க தமிழர் மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

3. தமிழர்களையும் இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களையும் தேசிய இனங்கள் என வரையறுத்து, தேசிய இனங்களுக்கு சர்வதேசம் வழங்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் வழங்குமாறு தமிழர் மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

4. தமிழர் உள்ளிட்ட தேசிய இனங்களின் வரலாற்று வாழ்விடமாக உள்ள பகுதிகளை தேசிய இனங்களின் தாயகமாக அறிவித்து பிறர் அக்கிரமிப்பில் இருந்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என தமிழர் மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

5. தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் மொழிகளையும் அந்தந்த மாநிலத்தின் தேசிய மொழியாகவும், இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் அறிவிக்க தமிழர் மாநாடு இந்திய அரசை கேட்டுக்கொள்கிறது.

6. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களில் உள்ள இந்திய அரசு, மாநில அரசு, தனியார் நிறுவனங்களில், அந்தந்த தேசிய இனத்தவருக்கு வேலைவாய்பிலும், கல்வியிலும் முன்னுரிமை வழங்க வகை செய்யும்படி இந்திய அரசை தமிழர் மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

7. தனியார் மயம், தாராளுமயம் உலகமயமாக்கப்படும் இந்திய பொதுத்துறை நிறுவனங்களை அந்தந்த மாநில அரசிடமே ஒப்படைக்க தமிழர் மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

8. இலங்கை மீதான இனக்கொலை, போர்குற்றம், பொருளாதாரத்தடை, பொதுவாக்கெடுப்பு ஆகிய தமிழக சட்டமன்ற தீர்மானங்களையும் கச்ச தீவு மீட்பு, ஏழு தமிழர் விடுதலை, உயர்நீதிமன்றத்தில் தமிழ், மீத்தேன் எதிர்ப்பு, வாயு குழாய் பதிப்பு எதிர்ப்பு ஆகிய சட்டமன்ற மற்றும் அமைச்சரவை தீர்மானங்களையும் எற்று நடைமுறை படுத்த இந்திய அரசை தமிழர் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9. தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்டிரினோ அணுஉலைகளை இழுத்துமூட இந்திய அரசை தமிழர் மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

10. தமிழர்கள் கோரிக்கைக்கான போரட்டத்தில் இருந்து கொள்கைக்கான போராட்டத்தை நோக்கி முன்னேறி அபலக்குரல் எழுப்புவதை விடுத்து அதிகாரத்திற்கான போரட்டத்தை நடத்துமாறு தமிழர்களை, தமிழர் மாநாடு கேட்டுக்கொள்கிது.

தமிழர் முன்னணி
நாள்: ஏப்ரல் 05, 2014
இடம்: சென்னை.

Pin It