15.3.2013 அன்று மக்கள் மன்றத்தின் முன்முயற்சியில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான சிங்கள அரசையும் அதற்குத் துணைபோன இந்திய அரசையும் கண்டித்து பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

kanchi_makkal_manram_640

ரங்கசாமி குளம் அருகே துவங்கிய பேரணி பெரியார் தூண் அருகே நிறைவடைந்தது. பேரணியில் இலங்கையில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட பாலச்சந்திரனைப்போல வேடமணிந்த நுற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர், ஈழத் தமிழ்மக்கள் படுகொலைக்குக் காரணமான இலங்கை அதிபர் இராசபக்சே, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பன்னாட்டு குற்றவாளி அமெரிக்காவின் ஒபாமா ஆகியோரின் உருவம் தாங்கிய மூவரை மக்கள் இழுத்துக்கொண்டு வந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியைப் பார்வையிட்டனர்.
 
           1. ஈழப்பிரச்சனையை வைத்து ஆதாயம் அடையப் பார்க்கும் ஓட்டுச்சீட்டு கட்சிகளை அம்பலப்படுத்துவோம்,
           2. இனம் காக்க போராடும் மாணவர்களை  ஊக்குவிப்போம்,
           3. தமிழ்மக்களின் உணர்வுகளை மதிப்போம்.
 
போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன, பேரணியின் நிறைவில் பெரியார் தூண் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொளத்தூர் மணி - திராவிடர் விடுதலை கழகம், கோவை இராமகிருஷ்ணன் - தந்தை பெரியார் திராவிடர் கழகம், வழக்கறிஞர் பார்வேந்தன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி பேராசிரியர் சரஸ்வதி, மக்கள் மன்றம் வழக்கறிஞர் மேகலா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தீணன், ம,தி,மு,க, மகேஸ், பாசறை செல்வராஜ் மற்றும் மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

kanchi_makkal_manram_641

1.உலக அளவில் இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தம் குறித்து சுதந்திரமான விசாரணைக் குழு அமைத்து நீதி வழங்க வேண்டும்,
2.தமிழ் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி ஈழத்திற்கு வலுசேர்த்து ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மக்கள் மன்ற கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சமர்ப்பாகுமரன் பாடல்களைப்  பாடினார். நிறைவில் மக்கள் மன்ற வழக்கறிஞர் மகா நன்றி கூறினார்.
 
- மகேஷ், மக்கள் மன்றம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It