may17_un_644

முத்துக்குமார் முருகதாசன் மற்றும் தமிழுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழீழ மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக தமிழரின் எழுச்சிக்காகத் தங்களை வேள்வித் தீயாக்கிய செங்கொடி மற்றும் அனைத்து தியாக உள்ளங்களை நினைவில் கொண்டு- முருகதாசன் 2009, பிப்ரவரி 12ம் தேதி ஜெனிவாவில் ஐ.நாவின் மனித உரிமைகள் தலைமைச் செயலத்தின் முன் நின்று ஐ.நா.வின் முகத்திரையை கிழிக்கும் விதமாக “ஐ.நா ஏகாதிபத்தியத்தின் அடியாளாக” செயல்படுகிறது என்பதை தனது கடிதத்தின் வாயிலாக உலக சமூகத்தின் கண்களைத் திறக்க “எனது உடலில் வைத்துக் கொண்ட நெருப்பு உதவட்டும்” என்று தன் உயிரைக் கொடுத்த நாளில் ஐ.நா அலுவலகங்களை உலகமெங்கும் முற்றுகையிட்டோம்.

பொதுமக்களைக் காக்கும் சர்வதேச  விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த  ஐ.நா அதிகாரிகள் பான்-கி-மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோரை  விசாரி. தமிழீழ விடுதலையை தடுப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைத்துள்ள ஐ.நா பொது வாக்கெடுப்பினை உடனே நடத்து.

may17_un_643

மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் சில,

  • · போரில் சிக்கிய தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்புவதை ஐ.நா நிறுத்தியது. உணவையும், மருந்துகளையும்   தடைசெய்வது போர்க்குற்றம். (இறுதியாக அனுப்பிய உதவி பொருட்களில் உணவு-மருந்துக்கு  பதிலாக கிரிக்கெட் மட்டைகள், பந்துகளை ஐ.நாஅனுப்பியது).
  • · இலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்ததன் மூலம் போரை தொடர்ந்து நடத்த அனுமதித்தது. (இன்றுவரை  இந்த எண்ணிக்கையை வெளியிடவில்லை).
  • · இலங்கை அரசு செய்த போர்குற்றங்கள், படுகொலை குற்றச்சாட்டுகளை புலிகளின் மீது சுமத்தச் சொல்லி கீழ்மட்ட அதிகாரிகளை ஐ.நாவின் உயர் அதிகாரிகள் நெருக்கியது.
  • · போர்முனைக்குச் சென்று நடக்க இருக்கும் இனப்படுகொலையை தடுக்க அனுப்பப்பட்ட விஜய் நம்பியார் கொழும்பு விடுதியை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்தது.
  • may17_un_642
  • · இனப்படுகொலையை முடித்ததை வெற்றிவிழாவாக கொண்டாடிய இலங்கை அரசு விழாவில் பான்-கி-மூன் பங்கெடுத்து சிங்களர்களை வாழ்த்தியது.
  • · சேனல்4 காணொளியை ஐ.நாவின் உயர் அதிகாரிகளுக்கு காண்பிக்கச் செய்யப்பட்ட ஏற்பாட்டை மறுத்து, இலங்கை அரசு தயாரித்த அவர்களின் விளம்பர காணொளியை பான்- கி-மூன் காட்டியது.
  • · சர்வதேச விசாரணை வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் சொன்னதை மறுத்து “இலங்கையே தன்னை விசாரித்துக் கொள்ளட்டும்” என்று பான்-கி-மூன் சொன்னது.
  • · தமிழர்களைக் கொன்ற இந்திய அமைதிகாப்பு படையில் வேலை செய்த “சித்தார்த்” என்பவரே பான்-கி-மூனின் மருமகன். இனப்படுகொலை போரின் ஆலோசகர் சதீஸ் நம்பியாரே, இனப்படுகொலையை தடுக்கும் பொறுப்பினை ஏற்ற விஜய் நம்பியாரின் உடன் பிறந்த அண்ணன்.
  • · போருக்கு பிறகு இன்று வரை நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் கூட சர்வதேச செய்தியாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் இன்று வரை அனுமதிக்காமல் தடுத்து வரும் இலங்கை அரசுக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்காமல் இருந்து வரும் ஐ.நாவின் நடவடிக்கையே ஒட்டுமொத்த இனப்படுகொலைக்கும் ஐ.நா அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது

இனப்படுகொலை ஆதாரங்களை அழிக்க பான்-கி-மூன் இலங்கைக்கு கால அவகாசம் அளித்தது, என பல நூறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

“தமிழர்களை இலங்கை அரசு நன்றாகக் காப்பதாக” தற்போது கூறி வரும் ஐ.நாவின் உயர் அதிகாரிகளை அம்பலப்படுத்தவும், 18 தமிழர்கள் தீயிட்டு தியாகம் செய்தும் தடுத்து நிறுத்த முடியாத இனப்படுகொலை போரின் பின்னணியில் ஐ.நாவும், இந்திய அரசும் வேலை செய்ததைக் கண்டிக்கவும், தமிழீழ விடுதலையை அறிவிக்க கோரியும் உலகமெங்கும் இருக்கும் ஐ.நா அலுவகங்களை முற்றுகையிட்டோம். நல்லிணக்கம் வாழ்வுரிமை, ஒன்றுபட்ட இலங்கையில் சுய உரிமையுடன் வாழ்வது போன்ற நோக்கில் வரும் ஐ.நாவின் எந்த தீர்மானங்களையும் நாங்கள் மறுக்கிறோம்.

may17_un_641

இந்த முற்றுகைப் போராட்டம் இந்தியாவில் சென்னை, இடிந்தகரை, பெங்களூர், மும்பை, டில்லி போன்ற இடங்களிலும், வெளிநாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளிலும் நடத்தப்பட்டது. ஐ.நா அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்தும் வரை போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் அடையாற்றில் (அம்பிகா அப்பளம் சிக்னல் அருகில்) உள்ள UNICEF என்ற ஐநாவின் நிறுவனத்தை கடந்த செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் கலந்து கொண்டன. போராட்டத்தை அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமை தாங்க, அய்யா வைகோ அவர்கள் வழிநடத்த, தோழர் ஜவஹருல்லா, அய்யா மணியரசன், தோழர் விடுதலை இராசேந்திரன், தோழர் பண்ருட்டி வேல்முருகன், தோழர் தெகலான் பாகவி, தோழர் அதியமான், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் போன்றோர் பங்கெடுத்தனர்.

”ஐ.நா. ஒழிக” என முழக்கமிட்டவாறு, இளைஞர்கள் ஐ.நா. மன்றக் கொடியைக் கொளுத்தினர். ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் ஆகியோரது உருவப்படங்களும், மனிதகுலப் பகைவன் இராசபக்சே உருவபொம்மையும் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது, அவ்விடமே பரபரப்பானது. காவல்துறையினரின் முற்றுகையை உடைத்துக் கொண்டு செல்லத் தோழர்கள் முயன்ற போது, தள்ளுமுள்ளு ஆனது. காவல்துறையினர் தோழர்கள் மீது தடி கொண்டுத் தாக்கியதில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

உலகமெங்கும் போராட்டம் நடைபெற்ற இடங்கள்

சென்னை - UNICEF, பகுதி அலுவலகம், அடையாறு

இடிந்தகரை – வருங்காலத்தின் போராட்ட களம், இடிந்தகரை

பெங்களூர் – டவுன்ஹால், பெங்களூர்

மும்பை - UNICEF, பகுதி அலுவலகம், பாரிஸ் பஞ்சாயத்து ரோடு, அந்தேரி கிழக்கு

டில்லி – UNICEF, இந்திய தலைமை அலுவலகம், லோதி எஸ்டேட், டில்லி

பிரான்ஸ் – மனித உரிமைகள் சதுக்கம், பாரிஸ்

அமெரிக்கா – ஐ.நா தலைமை அலுவலகம், நியுயார்க்

மலேசியா முற்றுகை போராட்டம் - http://www.youtube.com/watch?v=Jxhawl5W-sU

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் பங்கு கொண்டன.

may17_un_640

o உலகத் தமிழர் பேரமைப்பு

o மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

o இந்திய பொதுவுடமை கட்சி (CPI)

o தமிழ்நாடு முஸ்லீம்கள் முன்னேற்ற கட்சி

o மனிதநேய மக்கள் கட்சி

o சோசியல் டெமக்ரெட்டிக் பார்டி ஆப் இந்தியா

o தமிழக வாழ்வுரிமை கட்சி

o தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி

o திராவிடர் விடுதலை கழகம்

o தந்தை பெரியார் திராவிடர் கழகம்

o ஆதித் தமிழர் பேரவை

o விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி

o தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

o மே பதினேழு இயக்கம்

o தமிழர் எழுச்சி இயக்கம்

o தமிழக பெண்கள் செயற்களம்

o காஞ்சி மக்கள் மன்றம்

o தமிழர் முன்னேற்ற கழகம்

o அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்

o மருத்துவர் சங்கம்

o காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு

o பூவுலகின் நண்பர்கள்

o அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம்

o மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்

o மாற்றுத் திறனாளிகள் இயக்கம்

o ஆழிக்குடி மக்கள் சங்கம்(Marginalized Workers Forum)

o தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு - வடசென்னை

o தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு – மறைமலை நகர்

o தமிழ்க் கூட்டமைப்பு - பெங்களூர்

o நியூ சோசிலஸ்டிக் ஆல்டர்னேட்டிவ் (CWI-India)

o விழித்தெழு இயக்கம் - மும்பை

o மும்பை தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு - மும்பை

o AISA – RYA (டில்லி)

o உச்சநீதி மன்ற வழக்குரைஞர்கள்- டில்லி

o உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் - சென்னை

o உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் - மதுரை

o பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகத் துறையினர், மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள்.

Pin It