நாள்: 02-02-2013 சனிக்கிழமை

நேரம்: காலை 10 மணிமுதல் 2 மணிவரை

இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்

 நவம்பர் 07, 2012 தமிழக வரலாற்றில் மீண்டும் ஒரு அழிக்க முடியாத சாதியக் கறை படிந்த நாள். சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்ததற்காக தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், சுற்றுப்புற கிராமங்களான நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழக்கூடிய கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் 1500க்கும் மேற்பட்ட சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டு எரித்து தீக்கிரையாக்கப்பட்டது. தருமபுரியைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாளையம், பண்ருட்டி அருகே பாளையம், மேலிருப்பு, சேத்தியாதோப்பு அருகே சென்னிநத்தம் ஆகிய கிராமங்களும் சாதிய வன்கொடுமையாளர்களால் சூறையாடப்பட்டன.

 தருமபுரி பகுதியில் சாதிய வன்கொடுமையாளர்கள் தாக்குதல் தொடுத்து மூன்று மாதங்கள் கடக்க இருக்கும் சூழலில் இன்றைய நிலை என்ன?

இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்த சாதிய வன்கொடுமையைத் திட்டமிட்டு முன்னின்று நிகழ்த்திய முக்கிய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முக்கிய குற்றவாளிகள் யார் யார் என்று பட்டியலிட்டு தந்த பின்பும், அவர்கள் அனைவரும் தருமபுரி நகருக்குளேயே சுதந்திரமாக சுற்றி வரும் சூழலிலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தமிழக முதல்வரிடம் மூன்று முறை மனு கொடுத்தும், சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி. யிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. வீடுகளை இழந்த மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை இழப்பீடு நிதி ஒதுக்கப்படவில்லை, வீடுகள் கட்டித் தரப்படவில்லை. மாறாக தமிழக அரசின் பசுமை வீடுகளையே கட்டித் தருகிறார்கள். இன்றும் பாதிக்கப் பட்ட மக்கள் பயத்துடன் அரசு போட்டுத் தந்த பந்தலில்தான் வாழ்கிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி., யும் தமிழக அரசும் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பதும், பாதிக்கப்பட்ட மக்களிடம் பாராமுகத்துடன் நடந்து கொள்வதும், அவை ஆதிக்கச் சாதிவெறியர்களுடன் கைகோர்த்து நிற்கிறதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.

 நக்சல் பகுதிகள் என்று முத்திரையிட்டு உளவுத்துறையின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்கும் இக்கிராமங்களின் மீது நடைபெற்ற சாதிய வன்கொடுமை தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்ததோடு, இன்று வரை குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது தமிழக அரசின் அலட்சிய போக்கை மட்டுமல்லாது ஆதிக்க சாதி வெறியர்களுடன் கைகோர்த்து நிற்பதையும் காட்டுகிறது.

 இந்த சூழலில் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளைத் தூண்டிவிடும் விதமாக பேசியும் செயல்பட்டும் வரும் காடுவெட்டி குரு போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? கடந்த ஏப்ரல் 2012ல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் மாநாட்டிலும், பின்பு நாயக்கன்கொட்டாய் பகுதி அரியகுளத்திலும் "வன்னியப் பெண்களை பிற சாதி ஆண்கள் காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ வெட்டுங்கள்" என்று பேசி, காடுவெட்டி குரு சாதி வெறியையும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வெறியையும் வெளிபடுத்தினார். இது போன்ற பேச்சுகளே தருமபுரி சாதிய வன்கொடுமைக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிக் கட்சிகளை வீழ்த்துவோம்.

 தமிழகத்தில் ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் போராடி பல மாற்றங்களை ஏற்படுத்திய பெரியார் வாழ்ந்த சுயமரியாதை மண்ணில், இன்று பல ஆதிக்க சாதி அமைப்புகள் தலைதூக்கியுள்ளன. பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியார் அணிதிரட்டிய பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமானது இந்த சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவும், சமத்துவத்தை உருவாக்குவதற்காகவும் பயன்பட்டது. ஆனால், இன்று சாதிகட்சி தலைவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் தலித் அல்லாதோர் ஒன்றிணைவு என்பது சமூக நீதிக்கு எதிராகவும் சமூக வரலாற்றின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுப்பதாகவும் இருக்கிறது.

 ஆதிக்க சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைக் கிரிமினல்களாகச் சித்தரிப்பதுடன், "நாங்கள் 81% அவர்கள் 19%" என்று தனிமைப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும் முயல்கிறார்கள். அதற்கு உறுதுணையாக இராமதாஸ் தலைமையில் அனைத்து சமூக கூட்டமைப்பு, பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் தலித் அல்லாதோர் கூட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கி, அதன் மூலம் இடைநிலைச் சாதி மக்களுக்கு, சாதி வெறியூட்டி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அணி சேர்க்க முயல்கிறார்கள். மேலும், இவர்கள் காதலுக்கு எதிராகவும், சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராகவும், பெண்களின் சொத்துரிமைக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்திற்குக் குறைந்தபட்சப் பாதுகாப்பாக இருக்கும் சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் மக்களை அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 இராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோரின் காதல் எதிர்ப்பானது தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு மட்டுமல்லாமல் வன்னிய சாதிப் பெண்களின் சுயதேர்வு உரிமையை மறுத்து அவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் முயற்சி. பெண்களுக்கான சொத்துரிமையை எதிர்ப்பது என்பது பெண்களின் சமூக வளர்ச்சியை மறுத்து அவர்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் முயற்சி.

 இராமதாஸ் போன்றவர்கள் இதுபோன்ற தொடர் செயல்பாடுகளில் தன்னுடைய குடும்ப நலனுக்காகவும் ஓட்டு அரசியலுக்காகவும் உள்நோக்கம் கொண்டே செயல்படுகின்றனர்.

• தீண்டாமை, சாதிய வன்கொடுமைக்கு எதிராக போராடி வரும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் துணை நிற்போம்!
• ஓட்டு அரசியல் நலனுக்காகச் சாதி வெறியைத் தூண்டும் பா.ம.க போன்ற கட்சிகளைத் தனிமைப்படுத்தி வீழ்த்துவோம்!

கைது செய்யப்பட வேண்டிய முக்கிய குற்றவாளிகள்

1.  வி.பி. மதியழகன், பா.ம.க. ஒன்றியச் செயலாளர்
2.  ராக்கெட் ராமநாதன், ஆ.தி.மு.க
3.  கண்பார்ட்டி முருகன், அ.தி.மு.க செல்லங்கொட்டாய்
4.  கே.மாது, வன்னியர் சங்க மாவட்ட செலாளர்
5.  லாரி மாது செங்கல்பட்டு
6.  கணேசன், அ.தி.மு.க. செங்கல்பட்டு
7.  மெடிக்கல்ஸ் சிவா, நாயக்கன்கொட்டாய்
8.  சின்னசாமி, குட்டூர்
9.  கிருஷ்ணன், நாயக்கன்கொட்டாய்
10. சிவா மெக்கானிக், செல்லங்கொட்டாய்
11. வேடி, கதிர்நாயக்கன்நள்ளி
12. சந்திரன் கதிர்நாயக்கன்நள்ளி
13. சின்னவன், மிளகானூர்
14. எம்.எம். டெய்லர் முருகன், மிளகானூர்
15. பாலு, செல்லங்கொட்டாய்
16. எல்லப்பன், புளியம்பட்டி ஊர்த்தலைவர்
17. தென்னரசு, செல்லங்கொட்டாய்
18. மாது, கோனையாம்பட்டி
19. ரியல் எஸ்டேட் பாலு, செல்லங்கொட்டாய்
20. ராஜா, கோனையாம்பட்டி
21. ஆர்.கே. சின்னசாமி, ரெக்கிரியன்கொட்டாய்
22. குமாரவேல், வன்னியர் சங்க ஒ.செ, ரெக்கிரியன்கொட்டாய்
23. பழனி டிரைவர், கோனையாம்பட்டி
24. நடராஜ் மர வியாபாரி, வானியம்பாடியான்கொட்டாய்
25. செந்தில், கதிர்நாயக்கன்நள்ளி
26. வி.பி.சன்முகம், வெள்ளாளப்பட்டி

கோரிக்கைகள்

தமிழக அரசே!

1. கொடூர சாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்ட, வழிநடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்!
2. வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ.க்கு மாற்று!
3. இராமதாஸ் ஒருங்கிணைக்கும் அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு, பொங்கலூர் மணிகண்டன் ஒருங்கிணைக்கும் தலித் அல்லாதோர் கூட்டமைப்பு ஆகியவற்றைத் தடை செய்!
4. காடுவெட்டி குரு, இராமதாஸ் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்!
5. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமையாக்கு!

நிகழ்ச்சி நிரல்

தலைமை : எஸ்.சக்தி, நத்தம்

வரவேற்புரை : தபசி குமரன், திராவிடர் விடுதலைக் கழகம்

நிகழ்ச்சி தொகுப்பு : அருண்சோரி, தமிழ்நாடு மக்கள் கட்சி

கண்டன உரை

சின்னதம்பி, நத்தம்
பழனியம்மாள், அண்ணாநகர்.
ம. காசியப்பன், கொண்டம்பட்டி
தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் தெகலான் பாகவி, எஸ்டிபிஐ
தோழர் ஜெ. சிதம்பரநாதன், சிபிஐ, எம்.எல் மக்கள் விடுதலை
தோழர் செல்வி, தமிழ்நாடு மக்கள் கட்சி
தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
தோழர் மூ. வீரபாண்டி, இந்திய பொதுவுடமைக் கட்சி
தோழர் பி. சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தோழர் வன்னிஅரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி
தோழர் தமிழ்நேயன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
தோழர் நீலவேந்தன், ஆதித்தமிழர் பேரவை
தோழர் அ. மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம்
தோழர் கவின்மலர், ஊடகவியலாளர்
தோழர் சையது, சேவ் தமிழ்சு இயக்கம்
தோழர் உதயம், தமிழ்தேச பொதுவுடைமைக் கட்சி
தோழர் மா. சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்.
வழக்கறிஞர் ரஜினிகாந்த்
வழக்கறிஞர் சத்தியசந்திரன்
தோழர் அருள்முருகன், மே17 இயக்கம்

நன்றியுரை : தோழர் இளையராஜா, தமிநாடு மாணவர் இயக்கம்

***

நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஊர் பொதுமக்கள்
தமிழ்நாடு மக்கள் கட்சி
திராவிடர் விடுதலைக் கழகம்
சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
சி.பி.ஐ, எம்.எல். மக்கள் விடுதலை
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
9003154128 / 9941759641 / 9952930165

Pin It