சாதி தீண்டாமைக்கு எதிரான அணியில் பங்கேற்று தமிழர்கள் சாதியற்ற சமூகமாக வாழ தங்களின் பங்களிப்பை செலுத்த, உதவ அழைக்கிறோம். 

இரட்டைச் சுடுகாடுகளையும், ஊர் சேரி பிரிவினைகளையும் ஒழிக்க சாதி தீண்டாமை எதிர்ப்பு பரப்புரை மற்றும் 2012 நவம்பர் 26ஆம் தேதி மேற்கொள்ளப்படவிருக்கும் மனுதர்ம எரிப்பு போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பரப்புரை பயணம் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தினரால் தமிழகத்தின் வட மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 23.06.2012 முதல் 02.07.2012 வரை மேற்கொள்ளப்படவிருக்கிறது. பறை முழக்க இசை , சாதி ஒழிப்பு பாடல்கள், மனு, சாதி, மதங்கள், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அம்பேத்கர் பெரியாரின் புத்தகங்கள் விற்பனை, பொதுமக்களிடம் துண்டறிக்கை பரப்புரை, சாதி தீண்டாமைக்கு எதிரான உரை , மந்திரமா? தந்திரமா? ஆகியவற்றுடன் இப்பயணம் அமைய உள்ளது. சாதி-தீண்டாமைக்கு எதிரான படங்கள், வாசகங்கள் அடங்கிய, ஜெனரேட்டருடன் கூடிய ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் 15 பேர் பரப்புரையாற்ற உள்ளனர். இப்பயணத்தின் பட்டியல் வருமாறு: 

23.06.2012 – இராயப்பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி, ஆரணி, பெரிய பாளையம், திருவள்ளூர், கடம்பத்தூர் (இரவு தங்கல்) 

24.06.2012- தேரப்பாக்கம், தக்கோலம், அரக்கோணம்,நெமிலி, பணப்பாக்கம், காவேரிப்பாக்கம், இராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர் (இரவு தங்கல்) 

25.06.2012- வேலூர், காட்பாடி, விரிஞ்சிபுரம், காவனூர், குடியாத்தம், வாலந்தூர், அகரம், அணைக்கட்டு, கணியம்பாடி, கண்ணமங்கலம் (இரவு தங்கல்) 

26.062012 – ஆரணி, வீரணமங்கலம், சேத்துப்பட்டு, தேவிகாபுரம், போளூர், கலசப்பாக்கம், நாயுடுமங்கலம், வேங்கிக்கால், திருவண்ணாமலை (இரவு தங்கல்) 

27.06.2012 – புதுப்பாளையம், செங்கம், கரியமங்கலம், சாத்தனூர், தண்டராம்பட்டு, தானிப்பாடி, பெருங்களத்தூர் (இரவு தங்கல்) 28.06.2012 – மூங்கில் துறைபட்டு, வடசிறுவள்ளூர், வட பொன்பரப்பி, புதூர், ராவத்த நல்லூர், புதுப்பட்டு, ரங்கப்பனூர், பாண்டலம், சங்கராபுரம் (இரவு தங்கல்) 

29.06.2012 – கரடி சித்தூர், மண்மலை, மாத்தூர், கச்சராப்பளையம், எளத்தூர், சின்னசேலம், மேலூர், கள்ளக்குறிச்சி, மூரார் பாளையம், கொளத்தூர் (இரவு தங்கல்)

30.06.2012 – அத்தியூர், பகண்டை, கடம்பூர், திருபாலபந்தல், திருக்கோவிலூர், முகையூர், கண்டாச்சிபுரம், தேவநாதம்பேட்டை, ஆலம்பூண்டி, செஞ்சி (இரவு தங்கல்) 

01.07.2012 – வல்லம், தீவனூர், திண்டிவனம், ஆங்கூர், தொழுப்பேடு, சித்தாமூர், செய்யாறு, வேப்பஞ்சேரி, மதுராந்தகம் செங்கல்பட்டு(இரவு தங்கல்) 

02.07.2012 – சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர் (நிறைவு பொதுக்கூட்டம்) 

பொருளாதார பலம் இல்லாத இயக்கம் நடத்தும் இப் பரப்புரையில் விடுதலை சிறுத்தைகள், பொதுவுடமை இயக்கத்தினர், இஸ்லாமிய இயக்கத்தினர், தமிழ் தேச இயக்கத்தினர், சேவ் தமிழ் இயக்கத்தினர், மே-17 இயக்கத்தினர், கீற்று இணையத்தினர், அம்பேத்கரிய பெரியாரியல் உணர்வாளர்கள் மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிர் சிந்தனை உள்ள அனைவரும் பயணம் செல்லும் பகுதிகளில் ஆதரவு அளிக்க கோருகிறோம். பரப்புரையில் பங்கு பெறும் தோழர்களுக்கு உணவு, தேநீர், இரவு தங்குமிடம் மற்றும் பரப்புரை கூட்டங்களுக்கு தம்மால் இயன்ற அளவிற்கு தோழர்கள் உதவலாம். பரப்புரை கூட்டங்களிலும் பங்கேற்கலாம்.

நிதி உதவி அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

K.Danasekar
S.B a/c no. 469916860
Indian bank, UG Salai Branch

IFSC Code : IDIB000N061
MICR Code : 600019038
Branch Code : 00N061

பெரியார் திராவிடர் கழகத்தின் முண்ணனி பொறுப்பாளர்களான தபசி.குமரன் (94440 25408), கரு.அண்ணாமலை(94440 11124), எ.கேசவன் (94440 53879), டேவிட் பெரியார் (93800 03682), தினேஷ் (90807 97152) அன்பு தனசேகர் (98413 45773) இரா.உமாபதி (98847 54080) ஆகியோர் இப்பயணத்தை வழி நடத்துகிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இப்பணியில் தங்களின் பங்கேற்பையும் எதிர்பார்த்து சாதி தீண்டாமைக்கு எதிரான அணியில் பங்கேற்குமாறு தங்களை அழைக்கிறோம். தமிழர்கள் சாதியற்ற சமூகமாக வாழ தாங்களும் தங்களின் பங்களிப்பை செலுத்த, உதவ அழைக்கிறோம்.

Pin It