விட்டுவிடவா பற்றிக்கொள்ளவா எனும்போது
தேர்ந்தெடுத்தேன் பற்றுதலை...
துண்டிக்கவா தொடரவா எனும்போது
தேர்ந்தெடுக்கிறேன் தொடர்தலை..
ஏற்றுக் கொள்ளவா ஒதுக்கிவிடவா எனும்போது
தேர்ந்தெடுத்தேன் ஏற்றுக் கொள்ளுதலை..
காதலா சாதலா  எனும்போது
தேர்ந்தெடுக்கும் உரிமை
உன்னிடம் தரப்படுகிறது ...
தேர்ந்தெடு எதுவாயினும்
தயாராகிறேன்..
ஒருவேளை மரணத்தை
பரிசளித்தால் உயிர்த்தெழவும்.. 

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It