Political meetingஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அறிவிக்கிறது அவர்களை
வள்ளல்களாக

பட்டங்களை
பரிவட்டங்களை
சூட்டுகிறது
அவர்களின்
நன்கொடைகள்

உழைத்தவன்
உயிரைப் பொசுக்கிய
சாதனைகளை முழங்குகிறார்கள்
ஆயிரக்கணக்கான வீடுகளில்
அடுப்பெரிகிறது எங்களாலென்று

விதவைக் கணவன்களின்
விடுமுறை விண்ணப்பங்கள்
கப்பல்களாக மிதக்கின்றன
வள்ளல் குழந்தைகளின்
விளையாட்டில்

முத்துக்குமரன், துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It