ஸ்கான்டினேவிய தீபகற்பத்தின் தென்கிழக்குக்கு
சற்று தூரத்திலுள்ள நடுத்தர நகரமொன்றின்
சாதா இலக்கியவாதி
யோசித்து, படித்து, இறுக்க மொழியில்
எழுதினார் பெரிய புஸ்தகமொன்னு
போணியாகாத புத்தகமது
லஸ்கார்னர் ஆழ்வார் கடையில்
கேட்பாரற்று கிடந்தது குப்பையாய்
தமிழ்கூறும் நல்லுலகின் தென்கோடிக் கரை சார்ந்த
அதிநவீன இலக்கியவாதி
கண்களில் பட்டது; சகாய விலையில்
சாபவிமோசனம்; அ. ந. இ. வாதி
அலுவக நேரத்திலேயே
புச்தகத்தை படித்து உள்வாங்கி
வெளிவிட்டார் குசுவவொன்று
தமிழிலக்கிய பூவெல்லாம் குசு வாசம்
சிற்றிதழ் சந்தியில் ஏக கிராக்கி
மணத்தை ருசித்து சப்தத்தை சிலாகித்து
வேகவேகமான விமர்சன நூல்கள்
வெட்டியும் ஒட்டியும்
மயிர் பிளக்கும் வாதங்கள்
அனல் பறக்கும் சொற்களோடு
அழைப்பது எந்த பெயரில்...?
எழுத்தாளர்களுக்குள் எக்கச்கச்ச குழப்பம்
கருத்தருங்குகளில் கலாட்ட
''முன் நவீனத்துவம்'' முன்பே இருக்கே
என்றதொரு ஜோல்னாப்பை
''பின் நவீனத்தில் இது சேராது''
திருவாய் மலர்ந்ததொரு குறுந்தாடி
நல்லதொரு சுபமுகூர்த்த சுபதினத்தில்
நடுநவீனத்துவம் என
நாமகரணம் சூட்டி
நாசிமுழுக்க இழுத்தனர்
குசுவை.

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It