Writerஎந்த தராசைக் கொண்டு
கச்சித அளவில் இவளைப் படைத்தாய்னு
ஒரு நாலு தலை மிருகத்தை வியக்கவோ,

பூமியின் துணைக்கோள்
ஆணா, பெண்ணா என்று
உறுப்பு தேடி வான் பார்க்கவோ,

மசுறு, கோவேறு கழுதை,
இத்தனையாவது ஷேக்ஸ்பியர்,
அத்தனையாவது மார்க்ஸ்னு
பேரை மாத்திக்கவோ,

“போன மாசம் இந்த பத்திரிகையில
வந்த உங்க கவிதை சரியா புரியலையே,
கடினமாயிருக்கே”
என்றான வாசகர் கடிதத்தை குறிவைத்தோ

காகிதம் தின்று
உங்கள் பேனாக்கள் விட்ட
புளித்த ஏப்பங்களை
ஓரிடத்தில் குவியுங்கள்.

தேவையிருக்கிறது !

எங்கள் கழுதைகளுக்கு உணவும்
எங்களுக்கான கவிதைகளில் உயிரும்! 

பாஸ்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It