மனம் வெள்ளையாகவும்
கேசம் கறுப்பாகவும் இருக்கும்
இளமையான பிராயத்தில்
இனிமையும் அன்பும் இழையும்

வெளுக்கும் காதோரம்
வயதுகள் ஏறவும் மனம் கறுத்து
இலையுதிர் காலம் வர
தலைமுடிகள் மெல்ல உதிர்ந்து

வழுக்கையும் விழும்
வாழ்க்கையின் வளம் குறையும்
வற்றிய மனக்குளத்தில்
வசந்தமெல்லாம் வரலாறாகும்

கையில் கொஞ்சிய
கொள்ளை சிரிப்பு பிள்ளை கூட
கிழம் என்று கேலி
மொழி பேசி பார்த்து சிரித்திட

தாத்தாவிடம் ஆசி
தர வேண்டினேன் நான் - அவர்
வரும் முதுமை உனக்கும்
வாழ்நாளில் ஒருமுறை என்றார்!

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It