சூரியனால் கடலில் களவாடி
கரும்பந்தாய் உருமாறி
மலை மீது மோதியதால்
நிலைகொள்ளா தடுமாறி
தலை மீது விழறாயோ...

அலை உள்ள உன் கடலம்மா
வலை போட்டு எம்மை
காரமாய் தின்றதற்கு
பரிகாரமாய் எம்மீது
கரிசனமாய் நீ விடும் கண்ணீரோ...

மீதி இருந்த மழலைகளை
நாதியில்லா மனிதர்களே
ஜாதி மத பேதமின்றி
தாதி போல கவனித்தாரே..
அதை கண்டு நீ விடும்
னந்த கண்ணீரோ....

பல காலம் கடல் வேலை..
சில காலம் தங்கியிருக்க
தாய் நாடு வந்தவுடன்
பேய் போல வேகமாய்
நிலமான காதலியை
பலமாக தழுவிகொண்டு
ஒப்பாரி வைக்கிறாயோ...

கற்பனை பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It