தொட்டுவிடும் தூரம்தான்
ஆனாலும்
தொடர் ஓட்டமாய்

கவனிக்க வேண்டும்
கால்கள் இல்லை
காற்று கூட தொல்லை

காதலர்களாய்
அவனும் ஓட
அவளும் ஓட

நடுவில் ஒருவன்
நடுவராக இருக்ககூடுமோ

காததூரம் வந்ததும்
கடக் கடக் சப்தம் வேறு

சிறைபட்ட - என்
சிந்தனையை மீட்க

சிறைக்குள் இருந்து
சிரிக்கும் காதலர்காளாய்...


காதலுடன்...

என்னவனின்
கைபட்டு
எனக்கான
தாலாட்டு

காற்றலையில்
தவழ்ந்து வந்து
கைப்பேசிவழி
கசிந்து விழுந்தது

கவலைபடாதே
செல்லம்!
கால் டாக்ஸி எடுத்து
ஆஸ்பத்ரி போய்வா

காய்ச்சல்
சரி ஆகிவிடும்
நன்றாக தூங்கு - நான்வர
நள்ளிரவு ஆகும்


நீ...

நிழலாக நீ
என்னை தொடர்கிறாய்

பகல் பொழுதில்
பக்கத்திலே
பக்கவாட்டில் என

நிஜமாக
தொடர்கிறாய்

உனை கண்டும்
பயந்துள்ளேன்
கருப்பணசாமியோ என்று

எனை பிரிய
மனமில்லை உனக்கு

தினமும் தொடரும் நீ
நான் தூங்கியபின்பு
எங்கே செல்கிறாய் ?


நீ“தீ” இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It