திருப்பங்கள் மோதிய காயங்களில்
அடைமழைக்கால உற்சாகத்துடன்
பெருக்கெடுக்கும் வலி நதியில்
அமிழ்ந்தமிழ்ந்து மிதந்துசெல்லும்
என் மலரைத் தொடர்ந்தோடும்
ரணமான பாதங்கள்.

காலைக்கதிரின் சுத்தசிவப்பில்
காதலும் நேயமும்
அதுபோன்ற பிறவும்
அழகொளிவீசும் இதழ்களாகி
மணக்கும் உன்னதப்பூவின்
காலப்பேரிழுப்பின் வழியில்
எதிர்படும் பாலங்களில்
உள்நுழையும் கணம்தோறும்
நுளையும் என் நெஞ்சம்
கீறல்களை உத்தேசிக்காமல்

பூவின் போக்கை தடுக்கும்
பன்னாடை முள்ளடைசல் விலக்க
நீர்ச்சுழிப்பின் பயம்தாங்கி
இறங்கி. எடுத்துவிட்டு...
முடிவுற்ற நதியில் போய்கொண்டிருக்கும்
என் மலரை
இன்றுவரை
தொடர்ந்துகொண்டுருக்கிறேன் நான்.

ராஜ், துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It