தொடர்புடைய படைப்புகள்

கொலைகாரன் வருகிறான்
கொலை செய்கிறான்
பிறகு போய் விடுகிறான்
கவலைகளற்ற நிலையோடு
மிகுந்த பெருமையோடு...
கொலைகாரன் சாதி விசாரிப்பதில்லை
மதத்தை விசாரிப்பதில்லை
தொழிலை விசாரிப்பதில்லை
நிலைமையை விசாரிப்பதில்லை
கொலைகாரன் கொலையை மட்டும் செய்கிறான்
கொலைகாரன் சிறிதும் யோசிப்பதில்லை
கொலைக்கு முன்பல்ல
கொலை செய்ததற்குப் பின்பல்ல
கொலை செய்வது அவனுடைய தொழில்
அவன் ஒரு தொழிலாளியைப் போல
கொலை செய்கிறான்
கொலைகாரன் சான்றுகளைக் பற்றி கவலைப்படுவதில்லை
அவன் ஆதாரங்களை அழிப்பதில்லை
நன்கு அறிந்தே ஆதாரங்களை விட்டு விடுகிறான்
ஆதாரங்கள் மறைந்து போகின்றன
தானாகவே
கொலைகாரன் எங்கேயும் போக முடிகிறது
எப்போதும் கொலை செய்ய முடிகிறது
கொல்ல முடிகிறது எல்லா இடங்களில்
யாரை வேண்டுமானாலும்
கொலைகாரன் எல்லா இடத்திலும் இருக்கிறான்
கொலைகாரன் மக்கள் மத்தியில் வாழ்கிறான்
போலீஸ் அதிகாரியுடன் மது அருந்துகிறான்
மற்றும் நீதிபதியுடன் போதும்
காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம்
கொலைகாரனைப் பெருமையாக புகழ்ந்து பாடும்
கொலைகாரன் குடிசைகளில் இல்லை
ஆடம்பரமான கட்டிடங்களில் வசிக்கிறான்
பி.எம் டபள்யூ காரில் செல்கிறான்
இண்டர்நெட்டில் பேசுகிறான்
மற்றும் மொபைலில் கலகலப்பாக விளையாடுகிறான்
கொலைகாரனின் முகத்தின் மீது
சல்மான் கானைப்போல அப்பாவித்தனம் இருக்கிறது
முதியவரின் நரைத்த தாடி போல அனுபவம் கொண்டு.
கொலைகாரன் ஒட்டுமொத்த குழந்தைகளின் பள்ளிக்கூடங்களில்
விழிப்புணர்வு மேடைகளில்
மற்றும் புதிய ஆயுதங்களின் சேகரிப்பின்
தொடக்க விழாவை நடத்துகிறான்
கொலைகாரன் கவிதைகளைக் கேட்கிறான்
ஜனரஞ்சக நாடகங்களைப் பார்க்கிறான்
ஓவியக் கண்காட்சிகளுக்குச் செல்கிறான்
இலக்கிய குழுக்களில் சொற்பொழிவாற்றுகிறான்
கலைஞர்களுக்கு விருதுகள் விநியோகிக்கிறான்
கொலைகாரன் பூணூல் அணிகிறான் _
மற்றும் ஆங்கிலம் பேசுகிறான்
வேதங்களைப் பற்றி உரையாடுகிறான்
மற்றும் மார்க்ஸை மேற்கோள் காட்டுகிறான்.
கொலைகாரனுக்கு எந்தவொரு கட்சியும் இல்லை
கொலைகாரன் கட்சி எல்லைகளைத் தாண்டியவன்
கொலைகாரன் மனுவாதி, தேசீயவாதி
சமூகவாதி மற்றும் ஜனநாயகவாதி.

ஹிந்தியில் : முகேஷ் மானஸ்
தமிழில் : வசந்ததீபன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.