river 388வளைந்தோடும் அழகில்
தூரத்தின் மிதப்பு
அரூப நிழல்
வயிறு முட்ட நிறைந்திருக்கிறது
விழும் இலையெல்லாம்
விருதுகள்
தொடும் மரத்துக்கெல்லாம்
விருந்தோம்பல்
ஓடிக்கொண்டே இருக்கும்
தத்துவ துளிகளின் திரட்டு
பூக்கள் கொண்டு வரும்
காற்றோடு இயைந்த கனிவு
சில பாதங்களின் நினைவுச்சூடல்
கொலுசொலிகூட
சிலபோது கொலுசும் கூட
அமர்ந்த பொழுதில்
காலாட்டும்
நின்ற பொழுதில் தாலாட்டும்
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நதியை
நிகழ விடுகிறேன்
சாட்சியாய் நின்று காணும்
ஒரு நாணலின் திசை
சடவெடுக்கிறது

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.