சீலிட்ட நினைவுகள் யாவும்
உன் கை வசம் கொடுத்தாகிவிட்டது.
இத்தனை அவசரம் கூடாதெனச் சொல்ல
உரிமை வார்த்தைகள் ஒன்றையும்
நீ விட்டுச் செல்லவில்லை.
வேதனை தாழாது
வெம்பிக் கிடக்காதிருக்க
மல்லிகையை
மணக்காமல் இருக்கச் சொல்லிவிடு.
வறண்டு போன நாளையில்
வானத்திற்கு
கொட்டும் மழை தவிர
தூறல் விழுந்து
துன்பமிடாமலிருக்கும்
குறுஞ்செய்தியொன்றை
அனுப்பிவிடு.
எப்பொழுதாவது
உனக்குள் எட்டிப் பார்க்கும்
என்னை
இப்பொழுதே கொடுத்துவிடு.
மற்றபடி
உன்னைப் பற்றிய
ஒன்றுமே என்னிடமில்லை
உறித்தெடுக்க முடியாத
உணர்வில் கலந்திட்ட
அந்த முத்தத்தைத் தவிர.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.