தள்ளுவண்டியில் வாழ்வை அவித்து
காலத்தை இட்லியாக்கிடும்
பாட்டி
நான்கு சிறுகற்கள் எடுத்து
அடியில் வைத்து
தள்ளாடும் பெருநகர நிலையை
சரி செய்கிறாள்
புற்றீசலாய் வெளியேறுகிறது
பொக்லீன்கள்...

- சதீஷ் குமரன்

Pin It