மஞ்சள் மாறும் நொடிப்பொழுதில்
பேய் வேகத்தில்
சிக்னலைத் தாண்ட நினைப்பதற்குள்
சிவப்பு அபாயக்குறியீடு
எச்சரிக்க எரிச்சலோடு நிறுத்தி
ஆக்ஸிலேட்டரை முறுக்கி
பெருமூச்சுவிடும் வேளையில்
குழந்தையுடன் பிச்சையெடுக்கும்
இளம்பெண் கழிவிரக்கத்தையும்
எதிரில் நிற்கும் ஆடிக்கார் பொறாமையும்
காற்று இடைவெளியின்றி பிசினாயிருக்கும்
ஈருருளியினை ஏக்கப் பெருமூச்சையும்
பின்னாலிருந்து வரும் ஹாரன் சத்தம்
எரிச்சலமிலத்தையும்
ஒருங்கே உண்டாக்குகின்றன

பச்சை விழுந்ததும்
அத்தனையும்
நொடிப்பொழுதில் கரைய
அலுவலகம் செல்லும்
அவசரத்தில்
மீண்டும்
அசுர வேகப் பேயாகிறேன்

- பா.சிவகுமார்

Pin It