உன்னைத் தேடி நீளும் என் பாதைகளில்
வழிநெடுகிலும் நீள்கின்றன
குத்திக் கிழித்திட,
சாதிய
சீமைக்கருவேல முள்மரங்கள்.
இறுகிக் கிடக்கும்
தார்ச்சாலையாய் நீளும் பொழுதில்
மழை
வேர்க் காண விடாது
நெகிழிகள் மண்டிக் கிடக்கும்
நிலத்தில்தான்
பெரு நேசத்துடன்
பூத்திருக்கிறது
நம் உயிர் மகரந்தத்தில் வெடித்த
காதலின்
ஆவாரம் பூக்கள்

- சதீஷ் குமரன்