மூளுகிறது இருட்டின் திரை...
ஒளிச்சகதிக்குள்
மீளா இன்மை..
இருமை களவுண்ட
நிலவுகளை
பரிதி கிழிந்த கிரகணங்களை
வீணை அரும்புகளாக்கி
பாடுகிறது இரவு...

மூச்சடைந்த காற்று
இரவுத்திரை நிழலாய்
அசைக்கும் மூங்கில் பற்றைகளை
சருகாய் உருகி உரசிப் பற்றுவதா
நெருப்பு?

கண்ணாடி இதழ்ச் சிமிழ்
கவிழ்ந்த போதையில்
கண்விரலிடுக்கில்
பெண் கவ்விய
நிணச்சிலையா நெருப்பு.?

இருவர் இன்மையாகிய
இரவின் திரை கிழியட்டும்...

இரவில் உழவ
கொழுத்துக் கத்தும்
நாய் அடங்கட்டும்.

இருமை என்பது கரு
இருமை என்பது இடக்கரடக்கல்...

- சப்னாஸ் ஹாஷிம்

Pin It