உங்களுக்காகவே
உருவாக்கப்பட்டது போன்ற
வனத்தில் நடந்து செல்கிறீர்கள்.
உங்களுக்காகவே
கோர்க்கப்பட்டது போன்ற
இசையை கேட்டுச் செல்கிறீர்கள்
உங்களுக்காகவே
வீசப்படுவது போன்ற
தென்றலை அனுபவித்துச் செல்கிறீர்கள்
தொடர்ச்சியாகவே
நடந்து கொண்டிருங்கள்
உங்களுக்காகவே...
நிறைய
காத்துக் கிடக்கின்றன.

- ப.சுடலைமணி

Pin It