இரவில் புள்ளியென
விரியும் வெளிச்சம்

வெளிச்சத்தில் குறுகும்
இருள்

இருளில்
வெளிச்சம் உண்டு
வெளிச்சத்தில் இருளும்
உண்டு

இருளுக்குள் மிருகமாக
இருக்கிறது வெளிச்சம்
வெளிச்சத்துள் அரூபமாக
இருக்கிறது இருள்

விளக்கை போட்டு போட்டு
அணைக்கிறேன்
நான் வந்து வந்து போகிறேன்

- கவிஜி

Pin It