நேற்றைய
மழையிட்ட
சேற்றுக் கோலத்தை
சேதாரமின்றி
கடந்தாக வேண்டும்
கவனமாக வைத்த
முதல் அடியிலேயே
பீடித்துக் கொண்டது
பெரும்சேறு குழைந்த
ஊர்த்தோட்டத்து
பெரும்பள்ளத்தை
தோள் மேலேற்றி
கடத்திவிடும்
அப்பெருங்கிழவனின்
நினைவு...."

- முனைவர் கோ.சுனில்ஜோகி

Pin It