வெவ்வேறு குறுக்குப் புள்ளிகளிட்டு
பல்நுண்வளை நெளிவுடன்
பாந்தமான கோலமொப்ப
வலை விரிப்பதற்கு
சற்றும் குறைந்ததில்லை...
காதலைப் பகர்வது
பற்றிக் கொள்ளும் பசையுடன்
சிக்க வைக்கும் பளபள
பின்னல் சிலந்தி வலையில்
அமரும் சிற்றுயிரியின் நிலைக்கு
சற்றும் மேம்பட்டதில்லை...
அக்காதலை ஏற்பது
பிறர்க்கு வலை விரிப்பதும்,
மற்றவரின் வலையில் மாட்டிக் கொள்வதுமாய்...
இனிய ஏற்றயிறக்கத்துடன் நகர்கிறது வாழ்வு
- கா.சிவா