சற்றே ஈரம் பூத்திருந்த
உன் நேச சித்திரம் எடுத்து
வெயில் உலர்த்துகிறேன்.......

பாதி மயக்கத்தையும்,
மீதி கிறக்கத்தையும்
ஒரு சேர அள்ளிப் பூசுகிறேன்.....

உதடுகளின் பரஸ்பரத்தில்
வானவில்லின் வண்ணம்
விரிகிறேன்........

உன் கைகள் கோர்த்து
தூரத்து விண்மீன்களுக்குள்
களி நடனம் புரிகிறேன்.....

அள்ளித் தழுவும் அவசரத் தீர்மானங்களில்
கொஞ்சம் சொர்க்கங்கள்
சேர்த்தே செய்கிறேன்........

உன் நம்பிக்கையுடுத்தி, கடைசி
தீக்குச்சியென - உன்னிலே கவனமாய்
எரிந்தும் முடிக்கிறேன்.......

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It