திருவிழா
ஒரு நாள் கூத்துதானென்றாலும்
கொடும்பசியோடு காத்துக் கிடக்கிறது
துருவேறிய கத்தியும்
குரூரம் கவிந்த புத்தியும்
ரத்தம் குடிக்க.
செய்தவதறியாமல் காலுடைந்த நிலையில்
முழி பிதுங்கி நிற்கிறார்
எல்லையில் நின்றாலும்
எல்லையை விட்டு ஓடமுடியாத
காத்தவராயன்.

- சதீஷ் குமரன்

Pin It