சமத்துவமாய் வரிசையில் நின்று
சாதிய சுவரின்றி
பகுத்துண்டுப் பருகி
நுரை பொங்கக் கூடிக் குதூகலித்து
வீதியெங்கும் சமூகநீதி
கொடி ஏற்றிக் கொண்டாடும்
அரசு அனுமதி பெற்ற குடிகாரர்கள்
செத்த பின்
பிணம் எரிக்கத் தேடுகிறார்கள்
அவரவர்க்கான சாதிய சுடுகாடுகளை
குடி உரிமையில்..!

- சதீஷ் குமரன்

Pin It