வற்றிய முலைகளில் 
எஞ்சிய துளிகளைப் பருகி வாழும் சிசுவென 
நிலத்தின் மீது 
உழவு செய்து
பிழைக்கின்றன 
ஆதிகுடிகள்
 
குஞ்சுகளோடு பறவையையும் சேர்த்து
கொத்திப் பறக்க சிறகுகளை விரிக்கின்றன வல்லூறுகள்
 
கூடு சுமந்தலையும் நத்தைகளின் சாலையில்
அகண்டு விழும் இடியென
விரிகிறது 
எட்டு வழிச்சாலை
 
- சிவ.விஜயபாரதி
Pin It