விட்டு விடுதலையாகிட
காற்று நடத்தும் யுத்தத்தில்
மேலும் மேலும் 
மேலே உயர்கிறது பலூன்..
**
 
சிதிலமடைந்த கதவில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
கனமான பூட்டு.
**
அது என்னுடையதாகவும்
இருக்கலாம்.
அதில் என்னுடையதும்
இருக்கலாம்.
அடி வாங்கிச் செத்துப்போன
கொசுவைச் சுற்றிலும்
படிந்திருக்கிறது இரத்தம்..
 
- ஆதியோகி
Pin It