உண்மைதான்.
ஒருபோதும் நான்
உங்களின் முக்கியமல்ல.
ஒருமுறை உடைத்துவிட்டால்
தயவுசெய்து நகர்ந்துகொள்ளுங்கள்.
உடைந்தபின்
பதறவோ, பழுதுபார்க்கவோ அவசியமல்ல.
ஏனெனில்
துளியும் ஈர்ப்பற்ற
வெவ்வேறு காந்தங்களின்
ஒத்த துருவங்கள் நாம்.
பழகலில்
நீங்கள் வேண்டுமானால் எல்லைக்கோடுகளைத் தவிர்க்கலாம்.
ஆனால்
ஆக்ரோஷமான ஒரு எல்லைக்கோடு
என்னைச்சுற்றி எப்போதுமுண்டு.
ஒருவேளை நான்,
உங்கள் வெறுப்புப் பட்டியலின்
முதல் நபராக இருக்கலாம்.
ஆனாலும், நான் அப்படித்தான்.
ஆகவேதான் உங்கள் கூற்றுப்படி ஒருபோதும் நான்
உங்களின் முக்கியமல்ல.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It