புதுப் பெண் போட்ட
கோலத்தில் புள்ளிகள்
சீக்கிரம் சீக்கிரம்
இணைந்தன

*

செத்துப் போன கிராமத்து
வெட்டியானின் உடலுக்கு
டவுன் சுடுகாட்டில்
கரன்ட்டில் நெருப்பூட்டினான்
அசலூர்க்காரன்

*

முறைப்படி வெட்டிய
பிறகும் துருத்திக்
கொண்டிருக்கிறது
காது பட யாரோ சொல்லும்
'அது" போகுது

*

மஞ்சள்
சிவப்பு
பிச்சை
பச்சை

*

முழுதாக நம்பிய நாளில்
மலையுச்சியில் இருந்து
குதித்து விட்டேன்
மனம் பறந்து விட்டது

*

பின் வீட்டு கதவைத் திறந்து
அடைக்கும் சத்தத்தோடு
முடிந்து விடுகின்றன
தெருமுக்கின் பாதங்கள்

- கவிஜி

Pin It