சுதந்திரம் கேட்டுப்
போராடிய மீன்,
கண்ணாடித் தொட்டியோடு
கடலுள் விடப்பட்டது..
 
           ****
முட்களும் பூக்களும்
நிறைந்த பாதையில்
பூக்கள் மட்டுமே
மிதித்து நசுக்கப் பட்டிருந்தன..!
 
           **** 
களைந்த கேசத்தைக்
காட்டிக் கொடுப்பதோடு
நிறுத்திக் கொள்கிறது
கண்ணாடி..!
 
- ஆதியோகி
Pin It