உனக்கும், எனக்குமான
பங்குகளை ஐந்தாறு முப்பதாய்
பிரித்த பின்பு,
மீதமிருக்கும் அம்மா, அப்பாவின்
புகைப்படத்தையும், ஞாபகங்களையும்
யார் கைப்பற்றுவது என்பதில்
பிணக்கில்லை நம் இருவருக்குள்ளும்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It