"யார்?" என்று கேட்டதற்கு
"நான்" என்று
சர்வ சாதரணமாகப்
பதில் அளித்துப் போகிறான்,
"நான்" என்பது "யார்"
என்பதைக் கொஞ்சமும்
அறிந்திராமலும் ஆராயாமலும்..

பிறப்பு முதல் இக்கணம் வரை
புலன் வழி சேகரித்துச்
சேமித்த தரவுகளின்
கனத்தோடு
நான் சுமக்கும் "நானு'ம்
சேர்ந்து அழுத்த
நசுங்கித் தவிக்கிறது
ஆழ் மனதின் அமைதி.

- ஆதியோகி 

Pin It